கோவையில் ஆன்லைனில் வேலை தேடியவரிடம் கமிஷன் தருவதாக கூறி ரூ. 1.25 லட்சம் மோசடி - சைபர் கிரைம் போலீசார் விசாரணை..!

குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தி உறுப்பினராக பதிவு செய்து கொண்டால், அந்த இணையதளம் வழியாக நடைபெறும் பொருட்கள் விற்பனையில் அதிக அளவு கமிஷன் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.


கோவை: கோவையில் ஆன்லைனில் வேலை தேடியவருக்கு கமிஷன் அடிப்படையில் வேலை தருவதாக கூறி ரூ. 1.25 லட்சம் மோசடி செய்த மர்ம நபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை அருகே உள்ள சின்ன தடாகத்தைச் சேர்ந்தவர் தினேஷ் (28) டேட்டா என்ட்ரி ஆபரேட்டர். இவர் பகுதிநேர வேலைவாய்ப்பு குறித்து இணையத்தில் வேலை தேடினார்.

அப்போது, ஒரு இணையத்திற்கு சென்று வேலை வாய்ப்புக்காக தனது பெயர், செல்போன் எண், முகவரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், அவரது வாட்ஸ் - ஆப் எண்ணிற்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதில் குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தி உறுப்பினராக பதிவு செய்து கொண்டால், அந்த இணையதளம் வழியாக நடைபெறும் பொருட்கள் விற்பனையில் அதிக அளவு கமிஷன் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.

இதனை நம்பிய அவர் அந்த இணையதளத்தில் குறிப்பிட்ட வங்கி கணக்கு எண்ணிற்கு ஆன்லைன் மூலமாக ரூபாய் 5000, ரூபாய் 10,000 ரூபாய் 30,000 என பல்வேறு தவணைகளாக ஒரு லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் பணம் செலுத்தி உள்ளார்.

இந்த நிலையில், அந்த இணையத்தில் கூறியபடி அவருக்கு கமிஷன் எதுவும் வரவில்லை. இதனால் அந்த இணையத்திலிருந்து தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், அந்த எண்ணில் எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் மோசடி நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...