பொள்ளாச்சி அருகே வெள்ளத்தில் 2 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல்..!

ஆழியார் அணையில் உபரி நீர் திறந்து விடப்பட்ட போது வெள்ளத்தில் 2 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணையில் உபரி நீர் திறந்து விடப்பட்ட போது, வெள்ளத்தில் 2 சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பொள்ளாச்சியை அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், ஆழியார் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், அப்பர் ஆழியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளிலிருந்தும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

இதனால் முழு கொள்ளளவை எட்டி இருந்த ஆழியார் அணையில் இருந்து, அவ்வப்போது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உபரிநீர் மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், நேற்று அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் மாலை மூன்று முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, ஆழியார் அணையில் இருந்து மதகுகள் வழியாக 2,265 கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டது.

இதனிடையே, ஆழியார் அணையை ஒட்டியுள்ள தடுப்பணை பகுதியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் இருவர், வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அதிர்ஷ்டவசமாக இருவரும் வெள்ளத்தின் நடுவே பாறை ஒன்றில் நின்றனர். வெள்ளத்தில் சிக்கி இருவரின் அலரல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் உதவியோடு, ஆழியார் நகர் பகுதியைச் சேர்ந்த நாகேஷ் என்பவர் ஆற்று வெள்ளத்தில் இறங்கி, இருவரையும் பாதுகாப்பாக மீட்டார்.

இந்த நிலையில், ஆழியாறு தடுப்பணையில் ஆற்று வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள் சிக்கித்தவிக்கும் வீடியோ, வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...