கோவையில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 280-கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்.!!

கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 280- கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே தாமரைக்குளம் வழியாகக் கேரளாவுக்குக் கடத்த முயன்ற 280- கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் பகுதியிலிருந்து பட்டணம் செல்லும் சாலையில் கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலர் முத்து, வருவாய் ஆய்வாளர் மகேஷ் குமார் ஆகியோர் இன்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த இருசக்கர வாகனத்தை வட்ட வழங்கல் அதிகாரிகள் தடுக்க முயன்றனர். ஆனால் அதிகாரிகள் நிற்பதைக் கண்டு இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தவர் வாகனத்தைக் கீழே போட்டுவிட்டு ஓடியதாகத் தெரிகிறது.

பின்னர் இருசக்கர வாகனத்திலிருந்த மூட்டைகளைச் சோதனை செய்தபோது அதில் ரேஷன் அரிசி இருப்பதும், ரேஷன் அரிசி கேரளாவுக்குக் கடத்தப்படுவதும் தெரியவந்தது.

பின்னர் 280-கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை வட்ட வழங்கல் அலுவலர்கள் பறிமுதல் செய்து ரேஷன் அரிசி கடத்தி தலைமறைவான வாலிபரைத் தேடி வருகின்றனர்.

Newsletter

பள்ளிகள் திறப்பு: மாணவர் பாதுகாப்புக்கு கோவை காவல்துறை வழிகாட்டுதல்

கோவை மாவட்ட காவல்துறை பள்ளிகள் திறப்பையொட்டி மாணவர் பாதுகாப்பு குறித்த முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சாலை வித...

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...