கோவையில் ஓடும் பேருந்தில் 3-பெண்களிடம் கைவரிசை காட்டிய தீபாவளி திருடர்கள்.!!

ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டி உட்பட 3-பேரிடம் 5-பவுன் நகை மற்றும் 12-ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய நபர்களைக் கண்காணித்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


கோவை: ஓடும் பேருந்தில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டி உட்பட 3-பேரிடம் 5-பவுன் நகை மற்றும் 12-ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய நபர்களைக் கண்காணித்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை நகரில் கடந்த சில வாரங்களாக பேருந்தில் பயணம் செய்யும் மூதாட்டிகள், வேலைக்குச் செல்லும் பெண்களைக் குறிவைத்து ஒரு கும்பல் நகை மற்றும் கைப்பையை திடிவருகிறது.

பி.என்.பாளையம் ரங்கம்மாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் துரைராஜ், இவரது மனைவி சாந்தாமணி வயது 67, நேற்று இவர் பழையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்வதற்காக பேருந்தில் வந்தார்.

பேருந்து நிலையம் அருகே வந்தபோது யாரோ மர்ம நபர் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த 3-பவுன் தங்க செயினை பறித்துத் தப்பிச் சென்றனர்.

இதில் அதிர்ச்சி அடைந்த சாந்தாமணி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல, கவுண்டம்பாளையத்தில் சேர்ந்தவர் சொக்கலிங்கம் இவரது மனைவி சுபாஷினி வயது 55, நேற்று இவர் கவுண்டம்பாளையத்தில் இருந்து ஆர்.எஸ் புரத்திற்கு வந்தார்.

பேருந்து சாய்பாபா காலனி அருகே வந்தபோது யாரோ மர்ம நபர் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி சுபாஷினி வைத்து இருந்த கைப்பையைத் திருடி தப்பிச் சென்றனர். அந்த கைப்பையில் ரூபாய் 12 -ஆயிரம் பணம் இருந்தது.

இது குறித்து, அவர் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் பழனிச்சாமி அவரது மனைவி கலைவாணி 56, நேற்று மாலை இவர் வெள்ளலூரிலிருந்து சிங்காநல்லூருக்கு அரசு பஸ்சில் வந்தார். அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி யாரோ மர்ம நபர்கள் கலைவாணி கழுத்திலிருந்த 2-பவுன் தங்க செயினை பறித்துத் தப்பிச் சென்றனர்.

இது குறித்து அவர் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை நகரில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த செயின் பறிப்பு சம்பவத்தால் பெண்கள் மூதாட்டிகள் பேருந்துகளில் பயணம் செய்ய அச்சமடைந்துள்ளனர்.

எனவே காவல்துறை ரோந்து சென்று செயின் பறிப்பில் ஈடுபடும் நபர்களைக் கண்காணித்து கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...