தீபாவளி பண்டிகையால் புத்துயிர் பெறும் ஜவுளி தொழில்: பேஷன் ஆடைகள், கேஷுவல் வேர் அதிகம் விற்பனை- தொழில் துறை.!!

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் மேட் இன் இந்தியா மற்றும் மேட் இன் தமிழ்நாடு என அச்சிடப்பட்ட ஜவுளி பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.



கோவை: தீபாவளி பண்டிகையால் புத்துயிர் பெறும் ஜவுளி தொழில்: பெண்கள், குழந்தைகளுக்கான பேஷன் ஆடைகள் ஆண்களுக்கான கேஷுவல் வேர் அதிகம் விற்பனை என, தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி பண்டிகை வியாபாரம் தமிழகத்தில் களைகட்டியுள்ளது. பண்டிகையின் முக்கிய அம்சமான புத்தாடைகள் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் உள்நாட்டு ஜவுளி விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது என தொழில் துறையினர் கூறியுள்ளனர்.

இந்தியன் டெக்ஸ்பெடரேஷன்(ITF), கன்வீனர், பிரபு தாமோதரன் கூறியதாவது:-







இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஜவுளி பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாகப் பெண்கள் குழந்தைகள் புதிய ஆடைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.

தற்போது நோய்த்தொற்று பரவல் கணிசமாகக் குறைந்து உள்ளதை அடுத்து பெண்கள், குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் ஜவுளி பொருட்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் அப்பிரிவில் பேஷன் ஆடைகள் அதிக அளவு விற்பனை செய்யப்படுகின்றன.

இதேபோல் வீட்டிலிருந்து பணி செய்யும் முறை பெரும்பாலும் மாற்றப்பட்டு மீண்டும் அலுவலகம் சென்று வேலை செய்யும் நடைமுறையை பெரும்பாலான நிறுவனங்கள் பின்பற்றத் தொடங்கி உள்ளன. இதன் காரணமாகக் கடந்த காலங்களில் டி-ஷர்ட், ஷார்ட்ஸ் அதிகம் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலை மாறி தற்போது ஆண்களுக்கு அலுவலகத்துக்குச் செல்ல பயன்படும் கேஷுவல் வேர் ஜவுளி பொருட்கள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மொத்தத்தில் இந்த பண்டிகை காலம் இந்திய உள்நாட்டு ஜவுளி தொழிலில் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. இதன் காரணமாக ஜவுளி தொழில் சார்ந்த சங்கிலித் தொடரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனத்தினரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

ஜீன்ஸ் துணி ரகங்களுக்கு அதிக மவுசு!

தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ் சங்கத்தின்(OSMA) நிர்வாகி, அருள்மொழி கூறியதாவது, "ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கழிவுப் பஞ்சை கொண்டு நூல் தயாரிக்கும் பணி ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் மேற்கொள்ளப்படுகின்றன.



படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், துண்டுகள், ஜீன்ஸ் துணி ரகங்கள் உள்ளிட்ட பல்வேறு ஜவுளி பொருட்கள் ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் தயாரிக்கப்படும் நூலைக் கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன. கொரோனா நோய் தோற்று பரவலுக்குப் பிறகு மேற்குறிப்பிட்ட அனைத்து ஜவுளி பொருட்களின் தேவையும் மார்க்கெட்டில் அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகை முன்னிட்டு ஜீன்ஸ் துணி ரகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது."

இவ்வாறு அவர் கூறினார்.

'மேட் இன் இந்தியா', 'மேட் இன் தமிழ்நாடு' ஜவுளி பொருட்கள் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம்!

ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் மேட் இன் இந்தியா மற்றும் மேட் இன் தமிழ்நாடு என அச்சிடப்பட்ட ஜவுளி பொருட்கள் வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பெரும்பாலான ஜவுளி பொருட்கள் இந்தியாவில் தான் தயாரிக்கப்படுகின்றன என்ற போதிலும், கடந்த காலங்களைப் போல இல்லாமல் தற்பொழுது பெரும்பாலான ஜவுளி பொருட்களில் மேற்குறிப்பிட்ட வாசகங்கள் அச்சப்படுவது அதிகரித்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...