கோவில் நகை உருக்கும் திட்டம் கைவிட வலியுறுத்தி இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.!!

கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோவில் அருகில் தமிழக அரசின் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தைக் கண்டித்து இந்து முன்னனியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை: தமிழக அரசின் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இந்து முன்னனியினர் கண்டன ஆர்ப்பாடம் நடத்தினர்.



இதன் ஒரு பகுதியாகக் கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோவில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதில் அலகு குத்தி ஆண்டி வேடமணிந்து குழந்தைகளுக்குக் கடவுள் மற்றும் பாரத மாதா வேடமணிந்தும் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



இதில் தமிழக அரசின் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும், என வலியுறுத்தப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுய மாநில செயலாளர் கிஷோர் கூறுகையில், தமிழக அரசு தொடர்ந்து இந்து விரோத போக்கை கடைப்பிடித்து வருவதாகத் தெரிவித்தார். பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் இருப்பதால் தமிழக அரசின் இந்தத் திட்டத்தில் ஊழல் நடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.

கோவில்களை விட்டு அறநிலையத் துறை வெளியேற வேண்டுமென்று இந்துமுன்னணி தொடர்ந்து போராடி வருகிறது. இந்த சூழ்நிலையில் கோவிலில் உள்ள தங்க நகைகளை எடுத்து உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்தைத் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இது இந்துக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. எனவே இந்த திட்டத்தைத் தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் எனவும், இல்லையெனில் பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

ஒரு கால பூஜை கூட நடைபெறாத கோவில்கள் பல உள்ளதாகவும் அதனைச் சரி செய்யத் தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் இந்த திட்டத்தைத் தமிழக அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என தெரிவித்தார். மேலும் இந்துத்துவா அமைப்புகளை முதல்வர் சந்திக்க மறுப்பதாகவும் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் K.தசரதன் முன்னிலை வகித்தார். கோட்ட செயலாளர் S.சதிஷ் கோட்ட பேச்சாளர் ஆ.கிருஷ்ணன் மாவட்ட பொது செயலாளர் M.ஜெய்சங்கர் ஆகியோர் உரையாற்றினர்.

மாவட்ட செய்தி தொடர்பாளர் C.தனபால் மாவட்ட செயலாளர்கள் ஆறுச்சாமி, ஆனந்த், மகேஸ்வரன், ரமேஷ், மாவட்ட செயற்குழு ஜெயபாலன் மற்றும் மாவட்ட நகர கிளை பொறுப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...