லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன்... கோவை போலீஸ் கமிஷனர் தலைமையில் 'ஊழல் ஒழிப்பு உறுதிமொழி'.!!

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலில் போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் முன்னிலையில் அலுவலர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.



கோவை: கோவை போலீஸ் கமிஷனர் அலுவலக வாசலில் போலீஸ் கமிஷனர் தீபக் தாமோர் முன்னிலையில் அலுவலர்கள் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளது, அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவையுடன் ஊழலை ஒழிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.



நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்பொழுதும் உயர்ந்த நோக்குடன் ஊழல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கண்ணியத்துடன், ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்கவேண்டும் என்பதை முன்னிறுத்தி கோபாலபுரம் பகுதியில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையர் தீபக் எம் தாமோர், துணை ஆணையர் உமா முன்னிலையில், அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து துறை சார்ந்த பணியாளர்களும் இன்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

அனைத்து செயல்களிலும் நேர்மையும் சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், லஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாகச் செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வுகளை உரிய அதிகார மையத்திற்குத் தெரியப்படுத்துவேன் என்று நான் மனமார உறுதி அளிக்கிறேன் என்று அனைத்து பணியாளர்களும் இன்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...