ஃபேஸ்புக்கில் லைவ் செய்தவாறே திருப்பூரில் இளைஞர் தற்கொலை.!!

திருப்பூரில், மனைவியுடன் தகராறு, கடன் தொல்லைகள் ஆகியவை காரணமாக மன உளைச்சல் அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்துகொள்கிறேன் என ஃபேஸ்புக் லைவ் வில் கூறிவிட்டு 27-வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


திருப்பூர்: திருப்பூரில், மனைவியுடன் தகராறு, கடன் தொல்லைகள் ஆகியவை காரணமாக மன உளைச்சல் அதிகமாக இருப்பதால் தற்கொலை செய்துகொள்கிறேன் என ஃபேஸ்புக் லைவ் வில் கூறிவிட்டு 27-வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கும்பகோணம் பகுதியைப் பூர்விகமாகக் கொண்டவர் மணிகண்டன். அவரது 13-வது வயதில் திருப்பூருக்கு வந்துள்ளார். திருப்பூர் மாநகர் வெள்ளியங்காடு பகுதியில் சிலம்பம் மாஸ்டராக இருந்து வருகிறார்.

2-வருடங்களுக்கு முன்னதாக மாலினி என்பவருடன் மணிகண்டனுக்குத் திருமணம் ஆகி தாராபுரம் சாலை காட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருகின்றனர். நேற்று இவரது மனைவி அனைத்து தெற்கு மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் மணிகண்டன் தன்னை அடித்துத் துன்புறுத்துவதாகக் கூறியுள்ளார்.

இந்த புகார் தொடர்பாக மணிகண்டனிடம் காவல்துறையினர் பேசி, இன்று முதல் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து கவுன்சிலிங் போகுமாறு கூறியுள்ளனர். அதன்படி இன்று கவுன்சிலிங் செல்ல புறப்பட்ட போது அவரது மனைவியைப் போக சொல்லிவிட்டுத் தான் பின்னால் வருவதாகக் கூறி வீட்டிலேயே இருந்துள்ளார்.



இந்நிலையில் இன்று மதியம் ஃபேஸ்புக் லைவ் வில் வந்தவர், இதன்பிறகு என்னால் வாழமுடியாது அதனால் மன்னித்துவிடுங்கள் என்றும், மனைவி என்னுடன் இல்லை, கடன் தொல்லை அதிகமாகிவிட்டது.

நான் கேவலம் ஆனவனாக மாறிவிட்டேன். அதனால் தற்கொலை செய்துகொள்கிறேன் என கூறிவிட்டு ஃபேஸ்புக் லைவ் விலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள நல்லூர் காவல்துறையினர் தற்கொலை தொடர்பாக மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...