திருப்பூரில் ஆளுங்கட்சியினரின் அரசியல் தலையீட்டைத் தடுக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ.,ஆட்சியரிடம் மனு.!!

திருப்பூர் தெற்கு தொகுதியில் குடிநீர் விநியோகம், பட்டா விநியோகத்தில் ஆளுங்கட்சியினரின் அரசியல் தலையீட்டைத் தடுக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் ஆட்சியரிடம் மனு அளித்தார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளரும், திருப்பூர் தெற்கு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., வுமான சு.குணசேகரன், அதிமுக நிர்வாகிகளுடன் சென்று திருப்பூர் ஆட்சியர் வினீத்தை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

திருப்பூர் தெற்கு தொகுதியில் அம்மா இருசக்கர வாகன மானியம் வழங்குவதற்காக 6- மாதங்களுக்கு முன்னரே 469-பயனாளிகளின் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், 126- பேருக்கு மட்டுமே மானியத்தொகை வழங்கப்பட்டு உள்ளது.

இன்னமும் 339-பேருக்கு வழங்கப்படாமல் இருக்கிறது. இதை உடனடியாக வழங்க வேண்டும். கடந்த ஆட்சிக்காலத்தில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் 50-ஆயிரம் பட்டாக்களுக்கான அரசாணை வழங்கி உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட பெரிச்சிபாளையம் அண்ணமார் காலனி, காட்டுவளவு, பட்டத்தரசி அம்மன் காலனி, மிலிட்டரி காலனி, சத்யா நகர், பகுதிகளில் பயனாளிகள் தேர்வு செய்து பட்டியல் இணையத்தில் ஏற்றி பெறப்பட்டது.

ஆனால் இணையதளம் மூலம் பட்டா பதிவிறக்கம் செய்ய இயலவில்லை. தற்போது ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏழை மக்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் அவர்களுக்கே திரும்பவும் பட்டா வாங்கித்தருவதாக ஏமாற்றி வருகிறார்கள்.

எனவே ஏழை மக்களுக்கு விரைந்து பட்டா பதிவிறக்கம் செய்து தரக் கேட்டுக் கொள்கிறேன். திருப்பூர் தெற்கு தொகுதியில் குடிசை மாற்று வீடுகளுக்கான நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் குடியிருப்பு பயனாளிகளின் பட்டியலைக் கடந்த ஆட்சிக்காலத்தில் தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது.

இன்று ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மீண்டும் வீடு வாங்கித்தருவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வருகிறார்கள். மத்திய அரசுக்கு வாரியத்தால் ஒதுக்கப்பட்ட பயனாளிகளின் பட்டியலின்படி குடிசை மாற்று வீடுகளுக்குக் கட்ட வேண்டிய தொகையான ரூ 1.50 லட்சம் கடந்த காலத்தில் மறைந்த முதல்வர் அம்மா அவர்கள் சென்னை மாநகராட்சி பகுதிகளில் வீடுகள் பெற்ற மக்களுக்கான தொகை முழுவதையும் அரசே ஏற்றுக்கொண்டது.

மேற்படி வீடு காலி செய்ய வாகன வாடகையும் வழங்கப்பட்டது. அதே போலத் திருப்பூர் மாநகராட்சிப்பகுதிகளுக்கும் வழங்கிடக் கேட்டுக் கொள்கிறேன். அவ்வாறு முடியாவிட்டால் கட்ட வேண்டிய தொகையை நீண்ட கால தவணை முறையில் செலுத்த ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

திருப்பூர் தெற்கு தொகுதிக்குட்பட்ட பட்டுக்கோட்டையோர் நகரில் சுமார் 40-வருட காலமாக மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்குப் பூமிதான இயக்கத்தின் கீழ் வழங்கப்பட்ட இடத்திற்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டிருந்தது.

உரிமையாளருக்கும் குடி இருப்பவர்களுக்கும் இடையே சுமூக உடன்பாடு ஏற்பட்டு வழக்கைத் திரும்பப் பெறப்பட்டது. முழு தொகையையும் குடியிருப்பவர்களின் சார்பாக இதை உரிமையாளருக்கு வழங்கப்பட்டது.

அதனால் குடிநீர் இணைப்பு கூட பெற முடியவில்லை எனவே அவர்களுக்கு விரைவாகப் பட்டா வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பூளவாரி சுகுமார் நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் குடிசை மாற்று வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய தொகையை முழுமையாகச் செலுத்தியும் இன்று வரை அவர்களுக்குப் பத்திரம் அளிக்கப்படவில்லை.

எனவே அவர்களுக்கு உடனடியாக பத்திரம் வழங்கிடக் கேட்டுக்கொள்கிறேன். திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 15-முதல் 20-நாட்கள் இடைவெளியில் தான் குடிநீர் விநியோகம் செய்யப்படுகின்றது. பொதுமக்கள் லாரிகள் மூலம் தண்ணீர் பெற்றுப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் கொரோனா காலத்தில் பொதுமக்கள் மிகுந்த நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். எனவே கடந்த கால ஆட்சியில் 5-நாட்கள் இடைவெளியில் குறித்து சீராக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. போல தற்போதும் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அடிக்கல் நாட்டப்பட்டுத் தொடங்கப்பட்ட நான்காவது குடிநீர் திட்ட பணிகளை விரைவாக முடித்து பொது மக்களுக்குச் சீரான குடிநீர் விநியோகம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பெரிய கடைவீதி பள்ளி வாசலுக்கான சொத்து வரி, மற்றும் குப்பைவாரி ரூபாய் 4.5 லட்சம் செலுத்த வேண்டியுள்ளது. இதேபோல பல்வேறு தொழில் நிறுவனங்களும் தங்களுக்கான சொத்து மற்றும் குப்பை வரியை பல வருடங்களாகச் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளன.

கடந்த ஆட்சியில் இன்றைய முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோளை ஏற்று அன்றைய முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி சென்னை மாநகராட்சி பகுதிகளுக்குக் குப்பை வரியைத் தவிர்த்து சொத்து வரியை மட்டும் செலுத்த வழி வகை செய்தார். அதுபோல திருப்பூர் மாநகராட்சிக்குச் சொத்துவரி மட்டும் செலுத்துவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமியின் சீரிய முயற்சியினால் அடிக்கல் நாட்டப்பட்ட திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிட பணிகளை விரைந்து முடித்திட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.

கடந்த ஆட்சிக் காலத்தில் எனது சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்பட்டது. தற்போது ஆளும் கட்சியைச் சார்ந்தவர்கள் தலையீடு காரணமாக பொது மக்களுக்குச் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்ய இயலவில்லை.

எனவே முறையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் செய்திட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். திருப்பூர் தெற்கு வட்டம் முதலி பாளையம் ஊராட்சி மற்றும் நாச்சிபாளையம் ஊராட்சி பகுதிகளில் பட்டா கொடுக்கப்பட்டவர்களுக்கு முறையாக அளவீடு செய்து கொடுக்காமல் காலம் தாழ்த்துகிறது.

எனவே அவர்களுக்கு விரைவாக அளவீடு செய்து பயனாளிகளுக்கான இடங்களை ஒதுக்கீடு செய்து கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் மேலும் அவ்விடங்களில் பயனாளிகள், பசுமை வீடு திட்டத்தின் கீழ் அரசு மானியம் பெற்ற தங்களுக்கான வீடுகளைக் கட்டிக்கொள்ள அனுமதி அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

திருப்பூர் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நியாய விலை கடைகளில் முதியவர்களுக்கு அவர்களுடைய கைரேகை பதிவாவது இல்லை எனவே அவர்களுக்குக் கைரேகை பதிவாக விட்டாலும் மாதாந்திர பொருட்களை தவறாமல் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து பேட்டி அளித்த முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன், மனுவில் கூறப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார். 

இந்த நிகழ்ச்சியின் போது பகுதி கழக செயலாளர்கள் கண்ணப்பன், அன்பகம் திருப்பதி, பி.கே.எஸ்.சடையப்பன், ஏ.எஸ்.கண்ணன், கண்ணபிரான், ஆண்டவர் பழனிசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...