கோவை வடவள்ளி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், சிகிச்சை முறைகள், கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது குறித்து ஆய்வு செய்தார்.
கோவை: கோயம்புத்தார் மாநகராட்சி மேற்கு மண்டல பகுதிகளில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் மாநகராட்சி ஆணையாளர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டலம் வார்டு எண் 17க்குட்பட்ட வடவள்ளி நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர் அவர்கள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெறும் கர்ப்பிணி தாய்மார்கள், தாய் சேய்களுக்கு போடப்படும் தடுப்பூசிகள், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தாய் சேய் நல பாதுகாப்பு அட்டையில் அதன் விபரங்களை பதிவு செய்து பராமரிப்பது, அதனை கணினியில் பதிவேற்றம் செய்யப்படும் பணிகள் டாக்டர் பி. முத்துலட்சுமி மகப்பேறு திட்டத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவது, சித்த மருத்துவ பிரிவு மூலம் சிகிச்சை அளிக்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டார் .
பின்னர், மகப்பேறு சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பிய தாய்மார்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகப்பேற்றுக்குப் பின்னர் தற்போது தாய்சேய் நலமாக உள்ளார்களா? எனவும், குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடப்பட்டதா? எனவும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்திட்டம் மூலமாக ரூ. 18 ஆயிரம் நிதி உதவித் தொகை சம்மந்தப்பட்ட நபர்களின் வங்கிக் கணக்கில் வந்துள்ளதா ? எனவும் கேட்டறிந்த பின்னர், மருந்து சேமிப்பு அறை, உள்நோயாளிகள் அறை, தொற்றா நோய் பரிசோதனை பிரிவு உள்ளிட்ட இடங்களைப் பார்வையிட்டார்கள்.
டாக்டர் முத்துலட்சுமி, மகப்பேறு உதவித்திட்டம் மூலம் வழங்கப்படும் மகப்பேறு நிதியுதவி சரியாக மகப்பேறு தாய்மார்களுக்குச் சென்று சேர்கிறதா என்பதை மருத்துவர்கள், செவிலியர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
தமிழக அரசு மகப்பேறு தாய்மார்களுக்கு வழங்கும் நிதியுதவி தகுதியுடைய பயனாளிகளுக்கு முறையாக சென்று சேர வேண்டும் என கூறினார்.

இதனைத்தொடர்ந்து, வடவள்ளி கருப்பசாமி முதலியார் வீதியில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட மக்களைத் தேடி மருத்துவ திட்டத்தின் மூலம் சிகிச்சை பெறும் நபர்களின் வீட்டிற்குச் சென்று அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மருந்து மாத்திரைகள் வழங்கப்படும் முறைகள் குறித்தும் கேட்டறிந்தார்கள்.

பின்னர், மேற்கு மண்டலம் வார்டு எண் 17க்குட்பட்ட பொம்மனம்பாளையம் மின்மயானத்தின் செயல்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

அதன் பின்னர், அஜ்ஜனூர் மற்றும் வடக்கு வீதி ஆகிய இரு இடங்களில் உள்ள குட்டையைத் தூர்வாரி பராமரித்திடத் திட்ட அறிக்கை தயாரித்து, தமிழக அரசின் ஒப்புதல் பெற துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பொறியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனிஅலுவலர் ராஜ கோபால் சுன்கரா இ.ஆ.ப. அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு. சதிஷ்குமார் மேற்கு மண்டல உதவி ஆணையாளர் சிவசுப்பிரமணியம், உதவி செயற்பொறியாளர் திருமதி ஹேமலதா, மண்டல சுகாதார அலுவலர் சண்முகநாதன் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.