ஆவின் இனிப்பு வகைகள் பொது மக்களைச் சென்றடைய வேண்டும் - ஆவின் பொது மேலாளர் பேச்சு..!

மேலும், பால் விற்பனையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.


கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள ஆவின் வடக்கு மண்டல அலுவலகத்தில் ஆவின் பால் முகவர்கள் மற்றும் ஆவின் நிர்வாகம் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆவின் பொது மேலாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார்.

இந்த கூட்டத்தில் ஆவின் விற்பனை மேலாளர் சங்கீதா, ஆவின் அலுவலர்கள் அணில் குமார், ரவிச்சந்திரன், ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



இதனைத்தொடர்ந்து ஆவின் பொது மேலாளர் ஜெயக்குமார் பேசும் போது, வருகின்ற தீபாவளிக்கு ஆவின் தயாரிப்புகளான இனிப்பு வகைகள் பொது மக்களைச் சென்றடைய முகவர்கள் பாடுபட வேண்டும் என்றும், பால் விற்பனையை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

கோவை மாவட்ட ஆவின் பால் முகவர்கள் பாதுகாப்பு நலச் சங்கத்தின் சார்பில் தலைவர் மைக்கேல் ராஜ், ஒருங்கிணைப்பாளர் எஸ். லிங்கம், செயலாளர் சந்திரசேகரன், பொருளாளர் முருகன், துணைத் தலைவர்கள் செல்வராஜ், முருகேசன், துணைச் செயலாளர்கள் சம்பத், நிர்வாகிகள் அலெக்ஸ், கோவிந்தராஜ், மணிகண்டன், கணேசன் உட்பட ஆவின் பால் முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும், கூட்டத்தின் முடிவில் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவினை கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...