எல்.ஐ.சி, ரயில்வே துறை என அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு வருவது பொருளாதாரத்தை மிக அதிக அளவில் பாதிக்கும் என்றார்.
கோவை: ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதால் நாட்டின் பொருளாதாரம் அதிக அளவில் பாதிக்கும் என்று அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்ல பிரசாத் தெரிவித்தார்.
கிணத்துக்கடவில் கோவை தெற்கு மாவட்ட வட்டார, நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கமிட்டி செயலாளர் ஸ்ரீவல்ல பிரசாத் செய்தியாளர்களிடம் பேசியதாவது:-
நவம்பர் முதல் நாடு முழுவதும் கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கை குறித்து விரைவில் மாநில தலைவர் அழகிரி அறிவிப்பார்.
பிஜேபி அரசு விவசாயிகள், சிறுதொழில் செய்வோர், சிறு குறு தொழில் முனைவோர், மாணவர்கள், வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்கள் உட்பட அனைத்து பிரிவு மக்களையும் இந்த மோடி அரசு புறக்கணித்து வருகிறது.
நாட்டின் பொதுத்துறைகளை விற்பனை செய்வதில் மட்டுமே பாஜக அரசு அக்கறை காட்டுவதாகவும், எல்.ஐ சி, ரயில்வே துறை என அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. ரயில்வே துறையைத் தனியார் மயமாக்குவதால் தமிழகத்தின் பொருளாதாரத்தை மிக அதிக அளவில் பாதிக்கும். ஏற்கனவே ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு ஆகியவற்றால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ராகுல் காந்தி தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர்களிடம் கலந்துரையாடிய போது, மோடி அரசால் பொருளாதாரம் சிதைந்துள்ளது எனவும், இன்னும் அதிக அளவிலான பொருளாதார பாதிப்பு தமிழகத்தில் ஏற்படும். அதனால் தான் தமிழக முதல்வர் தொடர்ந்து இதுகுறித்து கடிதம் எழுதிக்கொண்டு இருக்கிறார்.
ஆனால், மோடி தலைமையிலான அரசு அதைக் கேட்கும் நிலையில் இல்லை. ஆனால் காங்கிரஸ் அப்படி இல்லை. இந்தியாவின் பொருளாதாரத்தைக் கட்டமைத்து, ஜனநாயக கலாச்சாரத்தை மீட்கும். இந்திய பொருளாதாரம், சமூகம், ஜனநாயக கலாச்சாரத்தை அழிக்கும் மோடி அரசைக் காங்கிரஸ் ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.