தமிழக அரசு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி கோவையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்..!

தமிழக அரசின் மின் விளக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.



கோவை: தமிழக அரசு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கக் கோரி கோவையில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவ படிப்பிற்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு சமீபகாலமாக நடத்தப்பட்டு வருகிறது. இதனை நிறுத்த வலியுறுத்தி காங்கிரஸ், திமுக உட்பட பல்வேறு கட்சியினர் பல்வேறு அமைப்புகள் போராடி வருகின்றனர். சமூக வளைதளங்களிலும் பொதுமக்கள் பலரும் நீட் தேர்வு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் தமிழக அரசின் மின் விளக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றனர்.



அதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பினர் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும், பிரதமரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.



நீட் தேர்வு என்பது தரமான மருத்துவர்களை உருவாக்கும் என்று கூறுவது அப்பட்டமான பித்தலாட்டம் என்றும் காசு இருப்பவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்து விடும் என்றும் தெரிவித்தனர்.



மேலும், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள நீட் விலக்கு சட்டத்தை மறுக்கவோ, மறக்கவோ மத்திய அரசுக்கும் எந்த ஒரு உரிமையும் இல்லை என்றும் குடியரசுத் தலைவர் 7 தமிழர்கள் விடுதலையிலும் இதுவரை ஒப்புதல் தராமல் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தெரிவித்தனர்.

Newsletter

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...