கடன் வழங்குதல் குறித்து வங்கி மேலாளர்கள் அனைவரும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் - பி.ஆர். நடராஜன் எம்பி..!!

கோவையில் வங்கிகள் ஒருங்கிணைந்து நடத்திய நிகழ்ச்சி இன்று சுகுணா மண்டபத்தில் நடைபெற்றது.



கோவை: தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஆண்டு 20,000 கோடி கடன் தொகையினை இலக்கு என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பி.ஆர்.நடராஜன் எம்பி தெரிவித்தார்.

கோவையில் வங்கிகள் ஒருங்கிணைந்து நடத்திய நிகழ்ச்சி இன்று சுகுணா மண்டபத்தில் நடைபெற்றது. நிதி, பொருளாதார சேவைகள் துறை, கோவை மாவட்ட அளவிலான வங்கிகள் குழு மற்றும் உறுப்பினராக உள்ள வங்கிகளும் இணைத்து நடத்திய இந்த நிகழ்ச்சியினை கோவை கனரா வங்கி முன் நின்று நடத்தியது.



முன்னணி வங்கிகள் வழங்கும் வீட்டு கடன், வாகனக் கடன், கல்விக் கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன், தனி நபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் வசதிகளைப் பற்றிய விழிப்புணர்வு மற்றும் பொதுமக்கள் சுலபமாக கடன் வசதிகளைப் பெறும் வகையில் இக்கண்காட்சி நடைபெற்று வருகின்றது.



இந்நிகழ்ச்சியினை கோவை மாவட்ட நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் கவிதா டிஆர்டிஏ அவர்களது தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பி.ஆர்.நடராஜன் எம்பி பேசுகையில்;



சென்னையில் நேற்று முதல்வர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த ஆண்டு 20,000 கோடி கடன் தொகையினை இலக்கு என்று தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இந்த இரண்டு மாத காலத்திலே 4,700 கோடி விநியோக்கிக்கப்பட்டிருகின்றது. பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமானால் இதனை வேகப்படுத்த வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் சென்னையில் கேட்டுக்கொண்டுள்ளார். இங்கு 22 வங்கிகள் கலந்து கொண்டுள்ளனர். வீட்டு கடன், வாகனக் கடன், கல்விக் கடன், பெரும் முறையை எளிமையாக்கி தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

கல்விக்கடன் இலக்கை தீர்மானித்து அனைவரும் எளிதில் பெரும் வண்ணம் செய்ய வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையை மாற்றியமைக்கும் பொறுப்பு வங்கிகளிடத்தில் தான் உள்ளது. கோவை மாவட்டம் எம்.எஸ்.எம்.இ யில் இந்தியாவிற்கு வழிகாட்டியாக உள்ளது. கோயம்புத்தூர் “மேக்கானிகள் ப்ரைன்” என்றார். கடன் வழங்குதல் குறித்து விழிப்புணர்வினை வங்கி மேலாளர்கள் அனைவரும் செய்தல் வேண்டும் என்றார்.

அதனை தொடர்ந்து பேசிய வானதி சீனிவாசன் எம்எல்ஏ கூறுகையில்;



இம்மாதிரியான நிகழ்ச்சி நாடுமுழுவதும் நடைபெற்று வருகின்றது என்பது வழக்கமான நடைமுறை. கொரோனா தாகத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் உதவி கடன், வாகன கடன், வீட்டு கடன் என்று பல்வேறு உதவிகள் தேவைப்படும் சூழ்நிலையில், நம் அனைவரின் உறவு என்பது வங்கிகளுடன் தொடர்ந்து வருகின்றது. வங்கிகளும் முன்களப் பணியாளர்கள் தான். வங்கி துரையின் மீது பெரிதும் மரியாதை உள்ளது.

ஜன் தன் யோஜன் திட்டத்தின் கீழ் பெண்கள் அனைவருக்கும் டிஜிட்டல் முறையில் எவ்வித தடைகளும் இல்லாமல் ஒரே நேரத்தில் பண பரிவர்த்தனை செய்யப்பட்டது. மேலும் விவசாயிகளுக்கு 6000 ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தவும், அதற்கு பெரும் உதவி செய்தது வங்கிகள் தான். வங்கி கணக்குகள் இல்லாதவர்களுக்கு, ஜீரோ பேலன்ஸ் வங்கி கணக்கினை ஏற்படுத்தித் தந்து தற்பொழுது அனைத்து மக்களும் வங்கி கணக்கினை பெற உதவி செய்துள்ளது. கொரோனா காலகட்டத்தில் 20 லட்சம் கோடி ஆத்மநிர்பாத் திட்டத்தின் கீழ் சீதாராமன் கொடுத்தார். அதில், கடன் வாங்கியதில் 10 சதவீதம் கடன் தொகையில் தர வேண்டும். இது போன்ற கடன் மேலாக்கள் அனைத்து பகுதிகளிலும் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு வங்கி கடன் குறித்த தகவல்கள் எடுத்துரைக்கப்படுகிறது.

எனவே, இதனை பொதுமக்கள் முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வங்கியில் பெறப்படும் கடனுக்கான தொகைகளை உரிய காலத்தில் செலுத்த வேண்டும் என்ற பொறுப்புணர்வும் அனைவருக்கும் வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...