கோவை அரசு மருத்துவமனையில் நுரையீரல் பாதிக்கப்பட்ட நபருக்கு நுரையீரலை அகற்றி மருத்துவர்கள் சாதனை - டீன் பாராட்டு..!

நுரையீரலை அகற்றினால் மட்டுமே பிற பகுதி நுரையீரலுக்கும் சுற்றியுள்ள இருதயம் மேலும் இரத்த குழாய்களுக்கு அது பரவாமல் தடுக்க முடியும் என்பதால் அறுவை சிகிச்சை நிபுணர்கள் அதை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் நுரையீரல் பாதிக்கப்பட்ட நபருக்கு நுரையீரலை அகற்றி சாதனை படைத்த மருத்துவர்களுக்கு டீன் பாராட்டு தெரிவித்தார்.

இது தொடா்பாக கோவை அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

சேலம் மாவட்டம் மேட்டூர் சின்ன சூரகாய் பகுதியை சேர்ந்தவர் L. கோவிந்தராஜன் (37) கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக கடந்த 17/4/21 அன்று அனுமதிக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார்.

இவர் 6 மாதங்களாக சர்க்கரை நோய்க்கு வைத்தியம் செய்து கொண்டுள்ளார். பின்பு சளியில் இரத்தம் வருவதற்காக சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, இடது பக்க நுரையீரலில் mucor infection எனும் பூஞ்சை நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

பின்னர், நோயாளி கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார். நோயாளி கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை துறைக்கு 28/9/2021 அன்று மாற்றப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர் அதை உறுதி செய்தனர்.

மேலும், mucor mycosis இடது பக்க நுரையீரலின் கீழ்ப்பகுதியை முழுவதுமாக ஆக்கிரமித்து நுரையீரலை சேதப்படுத்தி இருந்தது. இந்த பகுதி நுரையீரலை அகற்றினால் மட்டுமே பிற பகுதி நுரையீரலுக்கும் சுற்றியுள்ள இருதயம் மேலும் இரத்த குழாய்களுக்கு அது பரவாமல் தடுக்க முடியும் என்பதையும், மேலும் அவருடைய உயிரை காப்பாற்றும் நோக்கத்திலும், அந்த பகுதியை அகற்ற முடிவு செய்து இதை அறுவை சிகிச்சை நிபுணர்கள் அதை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.



அவருக்கு இடது பக்க நுரையீரலில் கிழ்பகுதியை (left oweabe) அகற்ற முடிவு செய்யப்பட்டது. அந்த அறுவை சிகிச்சை 30/9/2021 அன்று நடைபெற்றது.

இந்த அறுவை சிகிச்சையானது நமது மதிப்பிற்குரிய கல்லூரி முதல்வர் பேராசிரியர் நிர்மலா MS, DGO, அவர்கள் தலைமையில் இருதய அறுவை சிகிச்சைத்துறை தலைவர் சீனிவாசன் MS., MC மயக்கவியல் துறை தலைவர் கல்யாண சுந்தரம் MD., இருதய அறுவை சிகிச்சைத் துறை உதவி பேராசிரியர் மயக்கவியல் துறை அரவிந்த் MS, MCH, இளவரசன் MS, MCH உதவி பேராசிரியர் சதிஷ் MD, செவிலியர்கள் பொற்கொடி, காசுசிபாக்கியம்., மல்லிகா, சகிலா பானு, ரீனா, அம்பிகா, தமிழ் செல்வம் மற்றும் பிரவீனா ஆகியோர் கொண்ட குழு இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

இப்போது நோயாளி நலமாக உள்ளார். இந்த அறுவை சிகிச்சையானது முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாக செய்யப்பட்டது. இதை தனியார் மருத்துவமனையில் செய்தால் சுமார் 3 - 5 இலட்சம் வரை செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகள் மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...