இந்த வழக்கில் இன்று (அக்.25) கனகராஜ் உறவினர் தனபால் (44) மற்றும் ரமேஷ் (34) ஆகிய இருவரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்து, கூடலூர் சிறையில் அடைத்தனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இன்று இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோத்தகிரி கொடநாடு எஸ்டேட்டில், 2017 ஏப்., 24ல், கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன. தொடர்ந்து எஸ்டேட் காவலாளி ஓம் பகதுார் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜ் உள்ளிட்ட 11 பேருக்கு தொடர்பு இருப்பதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக இருந்த கனகராஜ் தேடப்பட்டு வந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு சேலம் ஆத்தூர் அருகே சாலை விபத்தில், கனகராஜ் பலியானார். கனகராஜ் மரணம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்த வழக்கில் இன்று (அக்.25) கனகராஜ் உறவினர் தனபால் (44), மற்றும் ரமேஷ் (34) ஆகிய இருவரை நீலகிரி மாவட்ட போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கூடலூர் சிறையில் அடைத்தனர்.