பொள்ளாச்சியில் மழையின் காரணமாக சாலை ஓரங்களில் வெங்காயத்தை கொட்டிய வியாபாரிகள்.!!

மழையால் நாசமான அழுகிய வெங்காயம் மார்க்கெட்டின் ரோட்டோரம் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டதால் வியாபாரிகளிடையே வேதனையை ஏற்படுத்தியது.


கோவை: மழையால் நாசமான வெங்காயத்தைக் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. வெங்காய மார்க்கெட்டின் ரோட்டோரம் நேற்று, மூட்டை, மூட்டையாக அழுகிய வெங்காயம் கொட்டப்பட்டது.

பொள்ளாச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள வெங்காய மார்க்கெட்டுக்கு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் வெங்காய வரத்து உள்ளது.

அதில் பெரும்பாலும், கேரள மாநில பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சின்ன வெங்காயம் வரத்து அதிகமானது. இதனால் சுமார் மூன்று வாரத்துக்கு முன்பு ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.20ஆக சரிந்தது.

போதிய விலையில்லையென்று விவசாயிகள் வேதனையடைந்தனர். அதுபோல், தமிழக பகுதியிலிருந்து மட்டுமின்றி மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பெரிய வெங்காயம் வரத்து அதிகரிக்கத் துவங்கியது.

இதனால், பல்லாரி ஒருகிலோ அதிகபட்சமாக ரூ.25-க்கே விற்பனையானது. ஆனால், இந்த மாதம் துவக்கத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலான மழையால் வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயங்கள், மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக அனுப்பும் பணி தீவிரமடைந்துள்ளது. இதற்கிடையே, கன மழை காரணமாக வெளிமாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட பல்லாரி மற்றும் சின்ன வெங்காயம் உள்ளிட்டவை அழுகிய நிலை ஏற்பட்டது.

இதனால், தொழிலாளர்கள் மூலம் அதனை தரம் பிரித்து விற்பனைக்காக அனுப்பும் பணி நடைபெற்றது. இருப்பினும், மழையால் நாசமான வெங்காயத்தைக் குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. வெங்காய மார்க்கெட்டின் வெளிப்பகுதி ரோட்டோரம் நேற்று, மூட்டை, மூட்டையாக அழுகிய வெங்காயம் கொட்டப்பட்டது, வியாபாரிகளிடையே வேதனையை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...