மின்சாரத் துறை மீது முதல்வர் நடவடிக்கை எடுப்பார்- பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி.!!

மின்சாரத் துறையில் முறைகேடு புகாா்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இந்தப் புகாா்கள் குறித்து முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தெரிவித்தாா்.


கோவை: பாஜக சார்பில் கேரளா மாநிலத்தில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட அலபி மாவட்டத்திற்குக் கோவையிலிருந்து சுமார் 6-லட்ச ரூபாய் மதிப்புடைய நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.



அந்த வாகனத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கொடியசைத்து அனுப்பி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் இ.பி.எஸ், ஓ.பி.எஸ் ஆகியோருடன் நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். அவர்களின் உள் விவகாரங்களில் குறித்து இந்த நேரத்தில் நான் கருத்துச் சொன்னால் அது தவறாக இருக்கும் என கூறினார்.



யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என தெரிவித்த அவர் சசிகலா வருகை குறித்த விவகாரத்தை அந்த கட்சிக்குள் தான் பேசிக்கொள்கின்றனர் என்றும் அதில் உள்ளே புகுந்து நான் கருத்துச் சொல்வது சரியாக இருக்காது எனவும் தெரிவித்தார்.

நமது அம்மா நாளிதழ் அண்ணாமலையைப் பாராட்டி எழுதி இருப்பது குறித்த கேள்விக்கு, பதிலளித்த அவர் யார் திட்டினாலும், பாராட்டினாலும் ஆதாரங்களோடு திட்டுங்கள், பாராட்டுங்கள் என பதிலளித்தார்.

திமுகவை பா.ஜ.வும் சரி அதிமுகவும் சரி விமர்சனம் செய்கிறது. அதிமுகவில் இருந்து இபிஎஸ் கூட சமீபத்தில் திமுகவைக் கண்டித்து அறிக்கை கொடுத்து உள்ளார். பாஜக ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறது எனவும் கூறினார்.

எந்த குழப்பமும் இல்லாமல் மக்கள் பிரச்சினையை அரசிடம் கொண்டு சொல்கின்றோம் என தெரிவித்த அவர், சில இடங்களில் நாங்கள் சொல்வதைத் தமிழக முதல்வரும் செவி சாய்த்துக் கேட்டுக்கொள்கின்றார் எனவும் எடுத்துக்காட்டாகக் கோவில்களைத் திறப்பது, ஆவின் டெண்டர் போன்றவற்றைத் தமிழக முதல்வர் ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவித்தார்.

தமிழகத்தில் திமுக பேசுவது எல்லாம் பா.ஜ.கவை எதிர்த்துத்தான் எனவும் அப்படி இருக்கும் போது திமுக பா.ஜ.க இடையேதான் கருத்தியல் ரீதியான அரசியல் நடைபெறுவதாகவும் அதிமுக தமிழகத்திலிருந்து கருத்துகளை முன் வைக்கின்றனர். இந்தியா சார்பிலிருந்து பா.ஜ.க கருத்துகளைத் தெரிவிக்கின்றது என தெரிவித்தார்.

கருத்தியல் அரசியல் பா.ஜ.க, திமுக இடையேதான் நடக்கின்றது எனவும் தெரிவித்தார். மேலும் யார் எதிர்க்கட்சி என்பதில் அதிமுக, பா.ஜ.கவிடையே போட்டி இல்லை என்றும், ஒன்றாக இருக்கின்றோம், என தெரிவித்தார்.

அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம், போகலாம் என கூரிய அவர் மக்கள் ஏற்றுக்கொள்வதைப் பொறுத்து என்பதால் விடையை மக்களிடமே விட்டுவிடலாம் என தெரிவித்தார்.

தமிழ்நாடு மின்வாரியத்தில் PPAவில் ஊழல் நடக்கப் போகின்றது, அதைச் சுட்டி காட்டுகின்றோம் என்றும் அமைச்சர் முதலில் அவர் வீட்டைச் சுத்தம் செய்துவிட்டுக் கேட்கட்டும், பதில் சொல்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜி வாயிலிருந்தே ஆதாரம் வரும், என தெரிவித்த அவர், திமுக பா.ஜ.க இடையே கருத்து மோதல்கள் நடைபெறவில்லை எனவும், கொடுத்த ஆதாரங்களுக்கே இதுவரை பதில் வரவில்லை எனவும் தெரிவித்தார். ஆதாரம் கொடுக்காமல் யாரும் பேசவில்லை என தெரிவித்த அவர் முதல்வர் மின்துறை மீதும் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...