கோவையில் டெங்கு பரவல் அதிகரிப்பு: இதுவரை 23-பேருக்கு பாதிப்பு.!!

கடந்த ஒரு மாதத்தில் 23-பேர் டெங்குகாய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். டெங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் டெங்கு நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில், ஆரம்பச் சுகாதார நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் டெங்குகாய்ச்சல் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. டெங்குகாய்ச்சல் ஏடிஸ் வகை கொசுக்களால் பரவுகிறது. இதனால் ஏடிஸ் வகை கொசுக்கள் உற்பத்தியாகும் பகுதியைக் கண்டறிந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது அபராதம் விதிக்கும் பணியை சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஒரு மாதத்தில் 23-பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், காய்ச்சலைக் கட்டுப்படுத்த உள்ளாட்சித் துறை பள்ளிக் கல்வித் துறை இணைந்து சுகாதாரத்துறை பணியாற்றி வருகிறது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி சுகாதார அதிகாரி சதீஷ் குமார் கூறுகையில்:-

கோவை நகரில் ஒரே மாதத்தில் இருபத்தி மூன்று பேருக்கு டெங்குகாய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து மாநகராட்சிகள் டெங்கு தடுப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோவை மாவட்டத்தில் டெங்குகாய்ச்சல் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் 12-வட்டாரங்களில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புக் குழு குழுவில் சுகாதாரத்துறை அலுவலர் ஆய்வாளர்கள் உள்ளனர்.

இவர்கள் மாவட்டத்தில், உள்ள வீடுகள் கம்பெனிகளில் ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதுகுறித்து, கோவை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் கூறும்போது மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில், டெங்குகாய்ச்சல் மற்றும் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஒரு பகுதியாக டெங்கு கொசு உற்பத்தியாகும் குறைகளைக் கண்டறிந்து தடுக்கும் வகையில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் அனைத்து பகுதிகளுக்கும் சென்று சட்ட விதிமுறைகளை மீறி தண்ணீரைத் தேக்கி வைத்திருப்பவர்கள் மீது அபராதங்கள் விதித்து வருகின்றன.

டெங்குகாய்ச்சல் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கத் தேவையான அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனையில் ஆரம்பச் சுகாதார நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் 23-பேர் டெங்குகாய்ச்சலுக்கு பாதிப்புக்குள்ளாகி சிகிச்சை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சிங்காநல்லூர் தொகுதியில் 'தாயுமானவர்' திட்டம்: முதியவர்களுக்கு வீடு வீடாக ரேஷன் விநியோகம் மற்றும் தூய்மைப் பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் 'தாயுமானவர்' திட்டத்தின் கீழ் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக ரே...

“நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” - கோவையில் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவை விமான நிலையம் வந்தபோது, “நிரந்தர பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி” உள்ள...

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...