'அவுட்சோர்சிங்' -நகரட்சித்துறையை கண்டித்து கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்.!!

தூய்மை பணிகளைத் தனியாருக்கு "அவுட்சோர்சிங்" செய்யும் தமிழக நகரட்சித்துறையை கண்டித்து, கோவையில் சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: தூய்மை பணிகளைத் தனியாருக்கு "அவுட்சோர்சிங்" செய்யும் தமிழக நகரட்சித்துறையை கண்டித்து, கோவையில் சிஐடியுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அவுட்சோர்சிங் முறையில் தூய்மை பணிகளை மேற்கொள்ளத் தனியாருக்கு வழங்கும் நகராட்சி நிர்வாகத் துறையைக் கண்டித்து கோவையில் திங்களன்று சிஐடியுவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழக அரசின் நகராட்சி நிர்வாகத்துறை அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இதில், மாநகராட்சிகளில் 400-வீடுகளுக்கு 2-பேர் நகராட்சிகளில் 1200-வீடுகளுக்கு ஒரு சுகாதாரப் பணியாளர் எனவும், தெருக்களை பெருக்கித் தூய்மை செய்திட மாநகராட்சிகளில் ஒரு வார்டுக்கு ஒருவர், நகராட்சிகளில் 2-வார்டு ஒருவர் எட்டு கிலோமீட்டர் தொலைவிற்கு ஒருவர் பேருந்து நிலையம் பராமரிக்க 4-பேர் கூலி ஒருவருக்கு ரூ.391-மட்டுமே என்பது உள்ளிட்ட சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப ஏற்கனவே தூய்மைப் பணியாளர்கள் இல்லாத நிலையில், புதிய நியமனம் செய்வதற்குப் பதிலாக ஆட்குறைப்பு நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொள்கிறது, மேலும் அவுட்சோர்சிங் முறையில் தூய்மை பணிகளைத் தனியாருக்கு வழங்கிட அரசு முயல்கிறது. உடனடியாக நகராட்சி நிர்வாகத்துறை இந்த சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.

ஒப்பந்த முறையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குக் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) கோவை மாவட்ட துணைச் செயலாளர் ராஜா கனி தலைமை தாங்கினார்.

இதில் சங்கத்தின் தலைவர் சி.பத்மநாபன் பொதுச் செயலாளர் கே.ரத்தினகுமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் சங்க நிர்வாகிகள் கணேசன் வீராசாமி உள்ளிட்ட திரளான தூய்மைப் பணியாளர்கள் பங்கேற்று நகராட்சி நிர்வாகத்துறையின் நடவடிக்கையைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...