கோவை அருகே பணம் வைத்து சேவல் சண்டை விட்ட 11 பேர் கைது..!

அன்னூர் அருகே பச்சாகவுண்டனுார் பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் கைது செய்தனர்.


கோவை: கோவை அருகே பணம் வைத்து சேவல் சண்டை விட்ட 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கோவை அன்னூர் அருகே பச்சாகவுண்டனுார் பகுதியில், பணம் வைத்து, சேவல் சண்டை நடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, எஸ்.ஐ., சிலம்பரசன் தலைமையிலான போலீசார், பச்சாகவுண்டனுார் பள்ளம் அருகே, சேவல் சண்டையில் ஈடுபட்ட செல்வராஜ் (27), ஆறுமுகம் (33), வீரமணி (22), சுரேந்தர் (25), ராஜகோபால் (56) ஆகிய ஐந்து பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 1,000 ரூபாய் பறிமுதல் செய்தனர்.

அதேபோல, எஸ்.ஐ., வெங்கடேசன் தலைமையிலான போலீசார், பச்சாகவுண்டனுார் சுடுகாடு அருகே சேவல் சண்டை நடத்திய, பொன்னுசாமி (62), மோகன்ராஜ் (24), குணசேகரன் (23), குமார் (31), தியாகராஜன் (32), முருகேசன் (30) ஆகிய ஆறு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து, 1,000 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...