பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெட்ரோல் பங்க் மேலாளரை தாக்கிய பெண்ணின் குடும்பத்தார்..!

காரமடையில் லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேலாளரை சரமாரியாக தாக்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



கோவை: காரமடையில் லாரி உரிமையாளர்கள் சங்க பெட்ரோல் பங்கில் பணிபுரியும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மேலாளரை சரமாரியாக தாக்கியுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் காரமடையில் மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் காரமடை லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது.

இந்த பெட்ரோல் பங்க்கில் மேலாளராக செல்வகுமார் என்பவர் பணியாற்றி வருகிறார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதே பெட்ரோல் பங்கில் பணிபுரியக்கூடிய பெண் ஊழியர் ஒருவருக்கு செல்வகுமார் தொலைபேசி வாயிலாக ஆபாசமாகப் பேசி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், தனது வீட்டிற்கு ஒரு நாள் வரும் படியும் அந்த பெண்ணை அழைத்ததாகவும், மேலாளரின் இந்த ஆபாச பேச்சு குறித்து அந்த பெண் தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.



இதனையடுத்து, பெட்ரோல் பங்க் சென்று மேலாளரிடம் பாலியல் தொந்தரவு குறித்து அப்பெண்ணின் குடும்பத்தினர் கேள்வி எழுப்பியதோடு மேலாளரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

இச்சம்பவம் அங்கு பணிபுரிந்து வந்த ஒருவரால் படம்பிடிக்கப்பட்டு தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...