திருப்பூரில் அம்மிக்கல் ஆட்டுக்கல் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டம்..!

கூட்டமாக மனு அளிக்க காவல்துறை அனுமதிக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் அம்மிக்கல் ஆட்டுக்கல் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டத்தில் ஊத்துக்குளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கல் குவாரிகளில் இருந்து கல் எடுத்து அதன்மூலம் அம்மிக்கல் ஆட்டுக்கல் இஞ்சி பூண்டு அரைக்கும் கல் உற்பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஐந்து வருடகாலமாக உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மாசு ஏற்படுத்தும் வகையிலான கல்குவாரிகள் அடைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், ஊத்துக்குளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தங்களது சொந்த நிலத்தில் உள்ள கல் குவாரிகளில் மாசு ஏற்படுத்தாத வகையில் பாறைகளில் தண்ணீர் ஊற்றி உலர்த்தி மாசு ஏற்படுத்தாத வகையில் கற்கள் வெட்டி எடுக்கப்பட்டதில் இருந்து அம்மிக்கல் ஆட்டுக்கல் மற்றும் இஞ்சி-பூண்டு அரைக்கும் கல் ஆகியவை உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பான முறையில் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் இயங்க அனுமதி பெற்றுத்தர வேண்டும். அதன் மூலம் எங்களது வாழ்வாதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மனு அளிக்க வந்தனர்.



இதனிடையே, கூட்டமாக மனு அளிக்க காவல்துறை அனுமதிக்காத காரணத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, காவல்துறையினர் தொழிலாளர்களை மனு அளிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுமதித்தனர்.

அப்போது, மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...