உனக்கு-38 எனக்கு-26... கோவையில் பெண்ணை ஏமாற்றிய வங்கி ஊழியர்: 4-பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு.!!

38- வயது பெண்ணை ஏமாற்றிய 26-வயது வங்கி ஊழியர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


கோவை: தன்னை விட பத்து வயதுக்கு மேல் உள்ள மூத்த பெண்ணுடன் பழகி ஏமாற்றியதாக, வங்கி ஊழியர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கோவை, வெள்ளலுாரை சேர்ந்த திருமணமாகாத, 38-வயது பெண் எம்.சி.ஏ., படித்துவிட்டு ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்தவர் கொரோனா நேரத்தில் ஐ.டி., வேலையும் பறிபோனதால், வங்கி கடனை திருப்பி செலுத்த முடியவில்லை. குடும்பத்தினருடன் தகராறு ஏற்பட்டு, தனியாக சரவணம்பட்டியில் ஒரு விடுதியில் தங்கினார். அங்கு ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இச்சூழலில், சிங்காநல்லுாரில் தான் கணக்கு வைத்துள்ள தனியார் வங்கிக்கு சென்று வந்தபோது, அந்த வங்கியில் பணியாற்றும் சிங்காநல்லூரைச் சேர்ந்த மவுனீஸ்வரன், 26 என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் வயது வித்தியாசத்தைக் காரணம் காட்டி, பெண் நெருங்கிப் பழக மறுத்துள்ளார். ஆனால், 'நான் வயது வித்தியாசம் பார்க்கவில்லை;

கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறேன்' என, வாலிபர் தெரிவித்தார். இதையடுத்து, இருவரும் நெருங்கிப் பழகி வந்தனர். அந்த பெண்ணிடம் இருந்து, வாலிபர் தேவைப்படும் போதெல்லாம் பணம் பெற்று வந்தார். இச்சூழலில் திடீரென பெண்ணுடன் பேசுவதை வாலிபர் தவிர்த்தார். இதுகுறித்து கேட்டபோது, 'நம் இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகம்; எங்கள் வீட்டில் சம்மதிக்க மாட்டார்கள். அதனால் இனிமேல் என்னுடன் பேச வேண்டாம்' என, வாலிபர் தெரிவித்துள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த பெண், அனைத்து மகளிர் கிழக்கு பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மவுனீஸ்வரன் மீது நான்கு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...