கோவையில் ரூ.1½ கோடி நகை கொள்ளை போன வழக்கில் பழைய குற்றவாளிகளிடம் போலீசார் விசாரணை..!

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளைப் பிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 4 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்- இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவையில் ரூ.1½ கோடி நகை கொள்ளை போன வழக்கில் பழைய குற்றவாளிகளை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை துடியலூர் அடுத்த கவுண்டர் மில் அதிர்ஷ்ட லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (52). இவரது வீட்டில் இவரது மனைவி மற்றும் குடும்பத்தார் வசித்து வருகின்றனர். ஐஸ்கிரீம் டீலர் ஆன இவர் கடந்த 22-ம் தேதி இரவு சாப்பிட்டு விட்டு குடும்பத்துடன் வீட்டின் முதல் மாடியில் உள்ள படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

மறுநாள் அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் 50 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

இதனிடையே, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீஸ் துணை சூப்பிரண்டுகள், 4 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்- இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் அடங்கிய 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

அவர்கள் பழைய குற்றவாளிகள், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

இந்த கொள்ளை வழக்கில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை சேகரித்து அதை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

மேலும், கதவுகளை உடைத்து திருடிய வழக்கில் கைதாகி விடுதலையான பழைய குற்றவாளிகளை சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அதுபோன்று திருட்டு வழக்கில் சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையானவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, சம்பவம் நடந்த அன்று அவர்கள் எங்கு இருந்தனர் என்பது குறித்தும் தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதுபோன்று அருகில் உள்ள கட்டிடங்கள் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...