தீபாவளி பண்டிகை: இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள் காலாவதி தேதி பதிவு செய்ய வேண்டும் - உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள்

தரமற்ற முறையில் இனிப்பு, காரம் தயாரிக்கும் நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: இனிப்பு, காரம் தயாரிப்பவர்கள் காலாவதி தேதி பதிவு செய்ய வேண்டும் எனவும் தரமற்ற உணவு தயாரிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:-

உணவுப் பொருட்களுக்கு தரத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இனிப்பு தயாரிக்கும் நிறுவனங்கள், அனுமதிக்கப்பட்ட நிறங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.உணவு கையாளுதல், பரிமாறுதல் பணிகளை மேற்கொள்பவர்கள் கையுறைகள், தலைக்கவசம், மேலங்கிகள் அணிய வேண்டும்.

தயாரிக்கும் இடங்கள் சுத்தமாகவும், ஈக்கள் இன்றியும் இருக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளை செய்தித்தாள்கள் கொண்டு மூடி வைத்தாலோ, பிளாஸ்டிக் பைகளில் பொட்டலமிட்டாலோ, ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும்.

அடைக்கப்பட்ட எண்ணெய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட எண்ணெய் உபயோகிக்கக் கூடாது. சில்லரை முறையில் விற்பனை செய்ய தயாரிக்கப்படும் இனிப்பு, காரங்களில், காலாவதி தேதி, பயன்படுத்தும் தேதி குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

வீட்டில் இனிப்பு தயாரிப்பவர்கள், உணவு பாதுகாப்பு அதிகாரிகளிடம் தற்காலிக அனுமதி பெற வேண்டும். பெறாவிடில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் இனிப்பு, கார வகைகள் தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த புகார்களை, உணவுப்பாதுகாப்பு துறையின், 94440 42322 என்ற வாட்ஸ்ஆப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்.

இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...