கோவை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்புப் பணிக்காக 1000 போலீசார் குவிப்பு..!

குறிப்பாக, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் வெகு சில நாள்களே உள்ள நிலையில் புத்தாடைகள், பொருள்கள், பட்டாசுகள் வாங்க கோவை ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, பூ மாா்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கடந்த சில நாள்களாகவே பொதுமக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் உள்ளது.

இதைக் கட்டுப்படுத்த மாநகரக் காவல் துறையினா் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நவம்பர் 1ம் தேதி முதல் அனைத்து வகைக் கடைகளும் முழு நேரம் இயங்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அதிக அளவில் வழிப்பறி, திருட்டு நடைபெற வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக மாநகா், மாவட்ட பகுதிகளில் தீபாவளியை முன்னிட்டு ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



குறிப்பாக, ஒப்பணக்கார வீதி, கிராஸ்கட் சாலை பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக கடை வீதி பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்களும் நிறுவப்பட்டுள்ளன. பேருந்து நிலையங்கள், ரயில் நிலையம், கோயில்கள் முன்பு போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...