மேலும், இரவு நேரங்களில் ஒளிரும் ஸ்டிக்கர் இல்லாததால் குழிகளுக்குள் வாகனங்கள் சிக்கும் அபாயம் உள்ளதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா முதல் சாமிசெட்டிபாளையம் பிரிவு வரை 1.4 கி.மீ. நீளத்துக்கு, சுமார் ரூ.85 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுமான பணி துவங்கி நடைபெற்று வருகிறது.
இதில், எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் இருந்து சாமிசெட்டிபாளையம் வரை தூண்கள் அமைக்கும் பணி வேகமாக நடந்து தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தூண்கள் அமைக்க தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் போடப்படாமல் உள்ளது.

அதே போல், மேம்பால பணிகளும் அலட்சியமாக நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தோண்டப்பட்ட சாலைகள் மீண்டும் போடப்படாமல் உள்ளது, போதுமான அளவு தடுப்புகள் அமைக்கப்படவில்லை. மாற்றுவழி பாதையும் முன் ஏற்பாடுகள் செய்யப்படாமல் வாகனங்கள் திருப்பி விடப்படுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும் போது:-
'பெரியநாயக்கன்பாளையம் மேம்பால பணிகள் தொடர்ந்து அலட்சியமாக நடைபெற்று வருகிறது. சர்வீஸ் சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் புழுதி காற்று பறக்கிறது. மழை நேரங்களில் குண்டும் குழியுமான சாலைகளில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் அதில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. உடனடியாக சர்வீஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல், ஒளிரும் ஸ்டிக்கர்களும் இல்லாமல் மக்கள் மிகுந்த அவதியடைந்து வருகின்றனர்' என்றனர்.