கோவை மாநகராட்சி பகுதிகளில் சேதமடைந்த மரங்களை அகற்ற நடவடிக்கை..!!

மாநகரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன.


கோவை: கோவை மாநகரில் சேதமடைந்த மரங்களை கண்டறிந்து அகற்றவும், சேதமடைந்த மரக்கிளைகளை வெட்டவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களாக மழை பகல் மற்றும் இரவு நேரங்களில் பெய்து வருகிறது. மேலும், காற்றின் வேகமும் சில சமயம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், மாநகரில் உள்ள சேதமடைந்த மரங்கள் சாயும் அபாயமும், மரக்கிளைகள் முறிந்து சாலையில் விழும் அபாயமும் உள்ளது.

இந்த நிலையில், அபாயகரமாக உள்ள மரங்களை அகற்றவும், தாழ்வான பகுதிகளில் மழைநீரால் சேதம் ஏற்படாமல் தவிர்க்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘மாநகரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேதமடைந்த மரங்கள் குறித்து கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்றன. இதில், காற்றின் வேகத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாத சேதமடைந்து விழும் நிலையில் உள்ள மரங்கள் மற்றும் கிளைகளை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன’’ என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...