கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் ஆண் யானை உடல் மீட்கப்பட்ட நிலையில், தந்தங்களை திருடிய நபர்கள் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை: கோவை மாவட்டம் போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட வெள்ளை பதி பிரிவு அருகே கரியன் படுகை சரக பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து, இறந்த யானையின் உடலினை காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி போன்ற காட்டு விலங்குகளால் உண்ணப்பட்டு இழுத்துச் சென்ற நிலையில் தற்போது இறந்த யானையின் எலும்புகள் மட்டும் அவ்விடத்தில் மீட்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கோவை மாவட்டம் பூண்டி அருகே கரியன் படுகை வனச்சரகப் பகுதியில் இறந்த நிலையில் 30 வயதான ஆண் யானை உடல் மீட்கப்பட்டுள்ளது.
யானையின் இரு தந்தங்கள் திருடப்பட்டுள்ளது. தந்தங்களை திருடிய நபர்கள் குறித்து கோவை வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், என்றார்.