கோவையில் பேரனை கொன்ற பாட்டியை தேடும் தனிப்படை போலீஸ்.!!

மூன்று மாத ஆண் குழுந்தையை கொன்றதுடன், 3-மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கிவிட்டு மன நலம் பாதிக்கப்பட்ட பாட்டி தப்பி சென்ற நிலையில், தனிப்படை போலீசாரின் ஒரு பிரிவு மதுரை சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: மூன்று மாத ஆண் குழுந்தையை கொன்றதுடன், 3-மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கிவிட்டு மன நலம் பாதிக்கப்பட்ட பாட்டி தப்பி சென்ற நிலையில், தனிப்படை போலீசாரின் ஒரு பிரிவு மதுரை சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவைகவுண்டம்பாளையம் நாகப்பா காலனியைச் சேர்ந்தவர் பாஸ்கர் ( 31). கட்டிட வடிவமைப்பாளரானஇவரது மனைவி ஐஸ்வர்யா (24). இவர்களுக்குக் கடந்த 3-மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன.

இரட்டை குழந்தைகள் என்பதால் குழந்தைகளைப் பார்த்து கொள்ள ஐஸ்வர்யாவின் தாய் சாந்தி (45) மதுரையிலிருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2-நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா வீட்டை விட்டு வெளியே சென்றிருந்த நேரத்தில் சாந்தி திடீரென்று 2-குழந்தைகளையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதில் இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை பரிதாபமாக இறந்தது. பெண் குழந்தை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. இதனிடையே பேரன் என்றும் பாராமல் கொடூரமாகக் கொன்று விட்டுத் தப்பிய சாந்தி, தற்போது தலைமறைவாக உள்ளார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கோவையை அடுத்த துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும்தலைமறைவாக உள்ள சாந்தி எங்கே என்று போலீசார் தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தி உள்ளனர்.

சாந்தியின் கணவர் மதுரையில் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். எனவே அவர் மதுரைக்குத் தப்பிச் சென்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதையடுத்து தனிப்படை போலீசாரின் ஒருபிரிவுமதுரை சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-

சாந்தி அவசர, அவசரமாக வீட்டை விட்டு வெளியேறும் காட்சி அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி உள்ளது. அவர் மனநல பாதிப்புக்குச் சிகிச்சை பெற்று வருவதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

இருப்பினும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை நம்பி 2-குழந்தைகளையும் தனியாக விட்டு சென்றது ஏன்? சாந்தி எந்த மருத்துவமனையில் மன நலம் பாதிப்புக்கு சிகிச்சை எடுத்து கொண்டார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம்.

பொதுவாக மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கொலை செய்தால், தப்பி செல்லாமல் அங்கேயே தான் இருப்பார்கள். ஆனால் சாந்தி தப்பி சென்றது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அவர் மன நலம் பாதிப்புக்கு எத்தகைய மருந்துகள் எடுத்து கொண்டார் என்பது தெரியவில்லை.

சாந்தியைக் கைது செய்தால் மட்டுமே முழுமையான தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம். எனவே அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...