நம்பர் பிளேட்டுகளில் விதிமீறல்கள் - கோவை மாவட்ட ஆட்சியருக்கு சிட்டிசன் வாய்ஸ் கடிதம்.!!

பெரும்பாலான வாகனங்களின் நம்பர் பிளேட் விதிகளின் படி இல்லாமல் பேன்சி ஆக இருப்பது என்பது சகஜமாக உள்ளது. நம்பர் பிளேட் விதிகளுக்கு உட்பட்டு இருந்தால் மட்டுமே குற்ற செயல்களில் ஈடுபடும் வாகனங்களை CCTV காமிரா மூலம் அடையாளம் காண்பது எளிதாக அமையும்.


கோவை: பெரும்பாலான வாகனங்களின் நம்பர் பிளேட் விதிகளின் படி இல்லாமல் பேன்சி ஆக இருப்பது குறித்து, மாவட்ட ஆட்சியருக்கு சிட்டிசன் வாய்ஸ் கடிதம் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து அந்த அமைப்பின் தலைவர் ஜெயராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் மாவட்ட ஆட்சியருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

கண்காணிக்கப்பட வேண்டிய போக்குவரத்து வாகன ஓட்டுனர்களின் குற்றங்களை தவிர்ப்பதற்கு

சமீபகாலமாகச் சென்னை, நெல்லை, கோவை போன்ற பெரு நகரங்களில் கூடபெரும்பாலான தனியார் வாகன ஓட்டுனர்கள் வாகனங்களை முறையான ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்காமல், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட ஓட்டுநர் உரிமங்களுடன் பணி செய்வதாக நிறைய புகார்கள் வருகின்றன.

இதற்கு ஆதாரமாக பல கிரிமினல்குற்றங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் என்பது விபத்தின் போது தெரிய வருகிறது. குறிப்பாக மது அருந்தி வாகனம் ஓட்டுதல், முதியவர்கள் பெண்களைதவறாக பயன்படுத்துதல், பாலியல்ரீதியாக துன்புறுத்தல் போன்ற பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுத்திக் கொள்வதை பத்திரிகைகள் வாயிலாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் அறியவருகிறோம்.

இதில் மிக முக்கிய முக்கியமானது, மற்ற பொது போக்குவரத்து ஓட்டுநர்களை போலஉரிமமோ, அடையாள அட்டையோ அல்லது சீருடை போன்ற எந்த கட்டுப்பாட்டிற்கும் கட்டுப்படாதவர்களாக இருப்பது, குற்றச்செயல் புரிவதற்கு முகாந்திரமாக அமைந்துள்ளது.

இதுபோன்ற நிகழ்வுகள் கார்களில் மட்டுமல்ல,தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஓட்டுனர்கள் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் ஓட்டுனர்களாக பணிபுரிவதாக தெரியவருகிறது. மேலும் இதுபோன்ற ஓட்டுநர்கள் பல ஊர்களில் மகளிர் விரோத போக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு பெண்களையும் பொதுமக்களையும் துன்புறுத்தி வருவதாக புகார்கள் வந்த வண்ணமிருக்கின்றது.

இதற்கு சான்றாக, சமீபத்தில் பொள்ளாச்சி போன்ற ஊர்களில் கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் அனைத்து விதிகளையும் மீறி sunfilm ஒட்டி ஓட்டப்படுகிறது. இது, வேறு எந்த போக்குவரத்து துறையிலுள்ள தவறுகளை விட ஆபத்தானது.

இது போன்ற செயல்களைக் கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக போக்குவரத்துத் துறை முறையான சோதனை மூலம் தடுக்க போதிய நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் பெரும்பாலான தனியார் வாகனங்கள் டாக்ஸி மற்றும் அரசுத்துறை வாகனங்களில் கூட sunfilm ஒட்டப்பட்டு சர்வ சாதாரணமாக இன்றும் ஊர்வலம் வருகிறது.

இது தவிர, பெரும்பாலான வாகனங்களின் நம்பர் பிளேட் விதிகளின் படி இல்லாமல் பேன்சி ஆக இருப்பது என்பது சகஜமாக உள்ளது. நம்பர் பிளேட் விதிகளுக்கு உட்பட்டுஇருந்தால் மட்டுமே குற்ற செயல்களில் ஈடுபடும் வாகனங்களை CCTV காமிரா மூலம் அடையாளம் காண்பது எளிதாக அமையும். குற்றவாளிகள் தப்பிப்பதை தவிர்க்க முடியும்.

ஆகவே மேற்கூறிய சீருடை அணியாத, ஓட்டுனர் உரிமம் இல்லாத வாகனங்கள், கருப்பு sunfilmஒட்டிய வாகனங்களை முறையாக அவ்வப்போது தணிக்கை செய்வது, தங்களுடைய குற்றத்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்பதை வலியுறுத்த கடமைபட்டுருக்கிறோம்.

இது விஷயமாக உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், வட்டார போக்குவரத்து அதிகாரிகள் போன்றவர்களுக்கு உடனடியாக சுற்றறிக்கை மூலம் அதிரடி நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே உடனடியாக குற்றவியல் எண்ணிக்கை கணிசமாக குறையும் என்ற நம்பிக்கையோடு தங்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு கோவை சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் தலைவர் ஜெராமன், செயலாளர் சண்முகம் ஆகியோர் கடிதத்தில் கூறியுள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...