இருசக்கர வாகனம், போலி நம்பர் பிளேட்டுகள், கட்டிங் பிளேயர், ஸ்க்ரூ டிரைவர், போன்றவற்றை பறிமுதல் செய்த சிங்காநல்லூர் போலீசார், வழக்கு பதிவு செய்து உடுமலைபேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை மாவட்ட காங்கிரஸ் இளைஞர் அணி துணை தலைவர் பைசல் ரஹ்மான்
உட்பட இருவர் சங்கிலி பறிப்பு வழக்கில் சமந்தபட்டதாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அவரை அடிப்படை உறுப்பினர் பதிவிலிருந்து நீக்கி தேசிய இளைஞர் காங்கிரஸ் மேலிடம் சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 21-10-21 அன்று கோவை குனியமுத்தூர், எம்.எஸ்.கார்டன் பகுதியில் உள்ள செல்வம் என்ற மளிகை கடையில் சிகரெட் வாங்குவது போல் நடித்து கடையில் இருந்த தனலட்சுமி என்பவரின் கழுத்தில் இருந்த சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதையடுத்து, குனியமுத்தூர் போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கோவை கரும்புக் கடையை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்து விசாரித்ததில், செயின் பறிப்பு சம்பவத்தின் போது இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்தது தெரியவந்தது.
வழக்கின் முக்கிய திருப்பமாக, கோவை கரும்புக்கடை பகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் கோவை மாவட்ட இளைஞர் துணை தலைவர் பைசல் ரஹ்மான், என்பவரை போலீசார் தற்போது விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இளைஞர் அணி துணை தலைவர் ரஹ்மான், கோவை குனியமுத்தூர், அபர்னா பி.கே.புதூர், இடையர்பாளையம் உட்பட ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் செயின் பறிப்பு வழக்கில் சமந்தப்பட்டுள்ளார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், தேசிய இளைஞர் அணி காங்கிரஸ் தலைவர் ஹசன் மெளலானா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"கோயம்புத்தூர் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் பைசல் பாவா, கட்சியின் எதிர்மறையான சிந்தனையிலும், கட்சிக்கு எதிரான கொள்கையிலும் வழக்குகளிலும் ஈடுபடுவதால், அவரை உடனடியாக இளைஞர் காங்கிரஸ் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குகிறேன். கட்சித் தொண்டர்கள் யாரும் அவருடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று வலியுறுத்துகிறேன்", என்று தெரிவித்துள்ளார்.