மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 2019-2020-ம் ஆண்டுக்கான நிதி சமூக தணிக்கையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
கோவை: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் 2019-2020-ம் ஆண்டுக்கான நிதி சமூக தணிக்கையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
இதில் கோதவாடி ஊராட்சி பகுதியில் நடைபெற்ற தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணியாளர்களுக்கான சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிறப்பு கிராம சபைக் கூட்டத்திற்குக் கிராம மக்களின் ஒருவரான ராமசாமி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினசாமி, துணைத் தலைவர் பரமசிவம் முன்னிலை வகித்தனர்.
இந்த கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட பணியாளர்கள் புதிய வேலைக்கான அடையாள அட்டை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் வேலை நாட்களை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
பின்னர் கூட்டத்தில் கலந்துகொண்ட பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்திக், கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய வட்டார வள அலுவலர் சுந்தரராஜன் ஆகியோர் சமூகத் தணிக்கையை ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் பணியாளர்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிராமசபைக் கூட்டத்தில்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.