கிணத்துக்கடவில் தடையை மீறி கள்ளு விற்பனை செய்தவர் கைது.!!

கிணத்துக்கடவு வடபுதூர் பகுதியில் தனியார் தோட்டத்தில் சோதனை செய்ததில் தடையை மீறி சட்டவிரோதமாக கள்ளு விற்பனை செய்தது தெரிய வந்ததையடுத்து, விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கிணத்துக்கடவு வடபுதூர் பகுதியில் தடையை மீறி கள்ளு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வடபுதூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளு விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் வடபுதூர் பகுதியிலுள்ள தனியார் தோட்டத்தில் சோதனை செய்ததில் சட்டவிரோதமாக கள்ளு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து தோட்டத்தில் கள்ளு விற்பனை செய்த திருமூர்த்தி என்பவரைக் கைது செய்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 லிட்டர் கள்ளுளை பறிமுதல் செய்து அதே இடத்தில்அழித்தனர்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...