கிணத்துக்கடவில் மதுபோதையில் தகராறில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு.!!

மதுபோதையில் தகாத வார்த்தை பேசி ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் ரஜினிவேலு மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


கோவை: மதுபோதையில் தகாத வார்த்தை பேசி ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர் ரஜினிவேலு மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சொலவம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரஜனிவேல் என்ற மாவியப்பன். ஆட்டோ ஓட்டுநரான இவர் நேற்றிரவு புதிய பேருந்து நிலையம் முன்பு மது போதையில் ரகளையில் ஈடுபட்டு வருவதாக கிணத்துக்கடவு காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் மதுபோதையில் தகாத வார்த்தை பேசி ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரஜினிவேலுவை காவல்துறையினர் பிடித்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து, மது போதையில் ரகளையில் ஈடுபட்டதாக ரஜினிவேல் மீது வழக்குப்பதிவு காவல்துறையினர் செய்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...