கோவை உட்பட தமிழ்நாடு முழுவதும் தொடர் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்த ' பலே' கொள்ளையனை மடக்கிப் பிடித்த கோவை போலீசார்..!

இருசக்கர வாகனம், போலி நம்பர் பிளேட்டுகள், கட்டிங் பிளேயர், ஸ்க்ரூ டிரைவர், போன்றவற்றை பறிமுதல் செய்த சிங்காநல்லூர் போலீசார், வழக்கு பதிவு செய்து உடுமலைபேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

கோவை: தமிழ்நாடு முழுவதும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டு வந்து, அழகிகளுடன் உல்லாசமாக வாழ்க்கையை அனுபவித்து வந்த கொள்ளையனை கோவை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்.

கடந்த 13-10-21 அன்று, கோவை சரவணம்பட்டி அம்மன் கோவில், நியூ வசந்தம் நகர் பகுதியில், மாலை நேரத்தில்ஒரு பெண் அங்குள்ள மளிகை கடைக்கு சென்று வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர், அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார். இந்த காட்சி அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

இந்த நிலையில், நேற்று சிங்காநல்லூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போதுசந்தேகிக்கப்படும் விதத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை விசாரிக்க முற்பட்டபோது, அந்த நபர் அங்கிருந்து தப்பிக்க முயற்சித்துள்ளார். அவசரமாக வாகனத்தை திருப்ப முயற்சி செய்த போது, அந்த மர்மநபர் அவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்துடன் கீழே விழுந்தார்.

கீழே விழுந்ததில் பலத்த காயம் ஏற்பட்ட அவரை பிடித்த போலீசார், உடனே அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் கால் எலும்பில் முறிவு ஏற்ப்பட்டுள்ளதாகதெரிவித்ததையடுத்து, மாவுக்கட்டு போடப்பட்டது.



பின்னர், விசாரணையில் தப்பிக்க முயற்சித்த அந்த நபரின் பெயர் ரவி என்ற ரவிசந்திரன் என்பதும், மதுரை,சிக்கந்தர் சாவடியை சேர்ந்த இவர்,கோவை சரவணம்பட்டியில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது மட்டுமல்லாது, கோவை கணபதி, பீளமேடு, சிங்காநல்லூர், குனியமுத்தூர், போத்தனூர், மதுரை, தஞ்சை, திருச்சி, சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

மேலும், தொடர்ந்து விசாரணை செய்ததில், பல திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்துள்ளது.

தமிழகம் முழுவதும் 50 க்கும் மேற்பட்ட இடங்களில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட வழக்குகள் ரவி மீது இருக்கும் நிலையில்,இதுவரை போலீசில் பிடிபடாமல் போக்கு காட்டி வந்ததும், மேலும்,, சங்கிலியை பறித்ததும் உடனேஅருகில் உள்ள ஏதாவது அடகுகடையில், அடகுவைத்து பணத்தை பெற்றுக்கொண்டு, விபச்சார அழகிகளுடன் உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்துள்ளது.



கையில் பணம் தீர்ந்ததும், மீண்டும் சங்கிலி பறிப்பில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ள ரவி,

ஒவ்வொருமுறை சங்கிலி பறிப்பில் ஈடுபடும் போதும் தனது இருசக்கர வாகனத்தின் நம்பர் பிளேட்டுகளை மாற்றியுள்ளதும், விசாரனையில் தெரியவந்துள்ளது.



அவனிடம் இருந்து இருசக்கர வாகனம், போலி நம்பர் பிளேட்டுகள், கட்டிங் பிளேயர், ஸ்க்ரூ டிரைவர், போன்றவற்றை பறிமுதல் செய்த சிங்காநல்லூர் போலீசார், வழக்கு பதிவு செய்து உடுமலைபேட்டை கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...