கோவை விமான நிலையத்தில் தினமும் 20 விமானங்கள் இயக்கம்: சகஜ நிலை திரும்புவதால் பயணிகள் மகிழ்ச்சி..!

கோவை சர்வதேச விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 20 என அதிகரித்துள்ளது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி விமான சேவை  வழங்கப்படுகிறது.


கோவை: கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு பின் கோவை விமான நிலையத்தில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இதனால், கொங்கு மண்டலத்தின் கீழ் உள்ள 7 மாவட்ட மக்கள், குறிப்பாக தொழில் ரீதியாக விமான பயணம் மேற்கொள்பவர்கள் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். 

கோவை விமான நிலையத்தில், கொரோனா நோய்தொற்று பரவலுக்கு முன், தினமும் 33 முதல் 35 விமானங்கள் வரை இயக்கப்பட்டு வந்த நிலையில், நோய்தொற்று பரவலுக்கு பின், மே மாதம் முதல் தினமும் 5 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. 

ஜூன் மாதத்திற்கு பிறகு, அரசு அறிவித்த தளர்வுகள், அதிக மக்கள் தொடர்ந்து தடுப்பூசி செலுத்திக் கொண்டதுஉள்ளிட்ட பல்வேறு காரணங்களால், கோவையில் தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது. அதன்படி, இந்த மாதம் அக்டோபர் 16 முதல் அக்டோபர் 23 வரை தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து பேசிய கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர், செந்தில் வளவன், " கோவை சர்வதேச விமான நிலையத்தில்கொரோனா நோய் தொற்று தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் சீரான முறையில் பின்பற்றப்பட்டு வருகின்றன. 

தற்சமயம், தினமும் இயக்கப்படும் விமானங்களின் எண்ணிக்கை 20 என அதிகரித்துள்ளது. கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டில்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி விமான சேவைவழங்கப்படுகிறது. 

இது தவிர கோவையிலிருந்து பெங்களூர் வழியாக அகமதாபாத், மற்றும் சென்னை வழியாக பரோடா, கவுஹாத்தி உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் நாட்களில் விமானங்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்ப்பார்கிறோம். 

இவ்வாறு அவர் கூறினார்.



Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...