பில் கிளியர் செய்வதற்கு 4%, கான்ட்ராக்ட் பெற 15% லஞ்சம் என்ற நிலை தான் தமிழகத்தில் உள்ளது - பாஜக அண்ணாமலை

பாஜகவை எப்படி கையாள வேண்டும், என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளதாக தெரிகிறது. பாஜகவை அவர் தொட்டுப் பார்க்கட்டும், வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுப்போம்.


கோவை: வங்காளதேசத்தில் நவராத்திரி பண்டிகையின் போது இஸ்கான் முழு நேர ஊழியர் படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டிக்கும் விதமாக உலகம் முழுவதும் உள்ள இஸ்கான் கோவில்களில் அமைதி போராட்டம் நடத்தப்படுகின்றது. இதன் ஒரு பகுதியாக, கோவை இஸ்கான் கோவிலில் நடைபெற்ற அமைதி போராட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார்.

பின்னர்செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,

வங்காளதேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையாராக இருக்கும் நிலையில், அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. அவர்கள் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றது. இவற்றை தடுக்க, அந்நாட்டு அரசு நிச்சயமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என தெரிவித்தார்.

பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாடு சிறுபான்மையினருக்கு வழங்கும் சட்ட ரீதியான உரிமைகளை கூட மற்ற நாடுகள் கொடுப்பதில்லை என தெரிகின்றது.தமிழக அமைச்சர்கள் குறித்து கட்டுமணி, கமிஷன் மணி எனஊழல் ஆரம்பித்து விட்டதாக நிறைய கட்டுரைகள் எழுதப்படுகிறது. ஆனால்,இன்னமும் தமிழக முதலவர் மௌனம் காப்பது ஏன் ? என கேள்வி எழுப்பினார்.

ஆதிதிராவிட அமைச்சர் கயல்விழி வீட்டில் ஆதிதிராவிடர் விடுதியில் பணி செய்யக்கூடிய சமையலர்களை ஷிப்ட்போட்டு வேலை வாங்குகிறார் எனவும் ஆட்சி அமைத்து 5 மாதங்களுக்குள் இவ்வளவு பிரச்னைகள் உள்ளது எனவும் இதற்கு பதிலே இல்லை எனவும் குற்றம் சாட்டினார்.

மத்திய அமைச்சர் பிரகலான் ஜோஷி இந்தியாவில் எங்கும் நிலக்கரி தட்டுப்பாடு வராது என கூறியுள்ளார் எனவும், எனவே, தமிழக அமைச்சர் நிலக்கரி தொடர்பாக பேசுவதற்கு எந்தவித உரிமையும் கிடையாது.நிலக்கரி ஒப்பந்தத்தை நீட்டிப்பு செய்யாமலும், மின்சாரத்தை விலை கொடுத்துவாங்கவில்லை எனக் கூறிவிட்டு, தற்போது வாங்கியதாக கதை சொல்கிறார்கள். தனியாரிடம் மின்சாரத்தை வாங்குவதற்கு தான் தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளது எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழக மக்களுக்கு மின்சார கொடுப்பதற்காக அல்ல, தமிழக மின்சார அமைச்சருக்கு கமிஷன் வருவதற்காகதான் என குற்றம் சாட்டிய அவர், இந்தியாவில் நிலக்கரி தட்டுப்பாடு கிடையாது எனவும், இதேபோல் தான் தடுப்பூசி தட்டுப்பாடும்கிடையாது எனவும் தெரிவித்தார். தமிழக அரசு தற்போது 60 லட்சத்திற்கும் மேல் தடுப்பூசி கையிருப்பில் வைத்திருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டினார்.

மின்வாரியத்தில் 4 சதவித கமிஷன் விவகாரத்தில் நான் தகவல்களைதிருடி விட்டதாக சொல்கின்றனர் எனவும்,திருட்டை கண்டுபிடிப்பதற்காக தான் அந்த ஆவணம் பரிமாறப்பட்டதே தவிர, அதை திருடி போடவில்லை என தெரிவித்தார். லஞ்சம் இல்லாமல் இந்த அரசு செயல்படுகிறதா? லஞ்சம்இல்லாமல் பெரிய கான்டிராக்ட் நடக்கிறதா? ஒரு அடிக்கு ஒரு தொகைஎன லஞ்சம் வாங்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

இதே அமைச்சர்3 மாதங்கள் கழித்து பதவியில் இருந்தார் என்றால், மதுவிலக்கு ஆயத்தீர்வைபற்றி பேசுவோம் எனவும் தெரிவித்தார். ஒரு குடும்பத்தின் வளம் காக்க, ஒரு குடும்பம் நன்றாக இருப்பதற்காக நேர்மையான அதிகாரியை ஊழல்வாதிகளாக மாற்றுகின்றனர் எனவும்,நேர்மையான நிறுவனம் நடத்த முயன்றால் அவர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர், எனவும் இப்படி செய்தால்சாதாரண மனிதர்கள் எப்படி ஊழல் வாதிகளாக மாறாமல் இருப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இந்த அரசு ஊழலை நிறுத்த வேண்டும், பில் கிளியர் செய்வதற்கு 4 சதவீதம்,கான்டிராக்கு 15சதவீதம் என்ற நிலை தான் தமிழகத்தில் உள்ளது. ஊழல் செய்தவர்கள் எங்கு இருந்தாலும் தூக்கி கொண்டு வருவோம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அது தமிழக அரசுக்கும், அமைச்சர்களுக்கும் பொருந்தும், என்றார்.

பாஜகவை எப்படி கையாள வேண்டும், என்று அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளதாக தெரிகிறது. பாஜகவை அவர் தொட்டுப் பார்க்கட்டும். 17 மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்கிறது. அவர், சொல்வதை போல், தொடுவார்கள் என காத்திருக்கிறோம். தொட்டு பார்க்கட்டும், வட்டியும் முதலுமாக திருப்பிக் கொடுப்போம், என தெரிவித்தார்.

ஒரு துறைமுகம் தொகுதியிலிருந்து சேகர் பாபு அரசியல் செய்கிறார். ஆனால், பாஜக 11 கோடி உறுப்பினர்கள் கொண்டது. அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, சேகர் பாபு ஆகியோர் ஒரு தொகுதியின் ராஜாவாக சுற்றி வருகின்றனர். ஊழல் செய்தால் தட்டி கேட்போம், என தெரிவித்தார்.

பாஜகவில் இருக்கும் பெண் நிர்வாகிகளை ஆபாசமாக பேசியதாக ஆதாரங்களுடன் புகார் கொடுத்தும், திமுக ஐ.டி பிரிவு தலைவர் தட்டிக்கொடுத்து, புகைப்படம் எடுத்துக்கொண்டு, அவர்களை பேருக்கு கட்சியை விட்டு நீக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர். அரசியலுக்கு வரும் பெண்களை ஆபாசமாக பேசுபவர்கள் மீது திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என்று கேள்வி எழுப்பினார். 

காவல்துறை நேர்மையாக இருந்தால், சரி சமமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்வர் விழித்துக் கொள்ள வேண்டும். தமிழக மக்கள் நலனுக்காக ஊழலை எதிர்க்க வேண்டும். இனியாவது, பயன்படுத்தும் வார்த்தைகளை திமுக அமைச்சர்கள் சரியாக பயன்படுத்துவார்கள் என நம்புகிறோம், ஒரு தொகுதியில் அரசியல் செய்பவர்கள் இங்கு வந்து மிரட்டல்  விடுக்கக்கூடாது என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Newsletter

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...