கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போதையில் தூங்கிய நகைத் தொழிலாளியிடம் 6 சவரன் நகை, பணம் கொள்ளை.

கோவை டவுன் பேருந்து நிலையத்துக்குள், நகைத் தொழிலாளி ஒருவர் மது அருந்திவிட்டு, அங்கேயே படுத்துக் உறங்கிய போது, அவரிடம் இருந்து நகை பணம் திருடிச் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டோரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை: நகைத் தொழிலாளி ஒருவர் மது அருந்தி விட்டு, கோவை டவுன் பேருந்து நிலையத்துக்குள் படுத்துக் கிடந்த போது அவரிடம் இருந்து நகை, பணம் திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் சின்னமனூரை சேர்ந்தவர் கண்ணன் வயது 52, தங்க நகைத் தொழிலாளி. இன்று கோவைக்கு வந்த அவர், காந்திபுரம் பஸ் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்துள்ளார். பின்னர்,போதையில் பஸ் நிலையத்திற்கு வந்த அவர் அங்கேயே படுத்து தூங்கிவிட்டார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள்,கண்ணனின் கைப்பையில் வைத்திருந்த இரண்டரை பவுன் தங்க வளையல், மூன்றரை பவுன் தங்க கட்டி ரூபாய் 9 ஆயிரத்து 500 பணம் ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பிச்சென்றனர்.

பின்னர், இதுகுறித்து கண்ணன் காட்டூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...