ஜெயலலிதாவின் கார் டிரைவர் பலியான வழக்கில் அவரது அண்ணனிடம் போலீசார் விசாரணை..!

தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கொடநாடு வழக்கு விசாரணை மீண்டும் துவங்கி உள்ளது. ஜெயலலிதாவின் கார் டிரைவரின் அண்ணன் தனபாலிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.


நீலகிரி: கொடநாடு கொலை வழக்கில் அடுத்தடுத்து தற்கொலை மற்றும் விபத்துக்கள் அரங்கேறி வந்த நிலையில், ஜெயலலிதாவின் கார் டிரைவர் உயிரிழந்த வழக்கு தொடர்பாக அவரது அண்ணன் தனபாலை விசாரணைக்காக போலீசார் அழைத்து சென்றனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்தவர் கனகராஜ் (36). இவர், சேலம் மாவட்டம் இடைப்பாடி தாலுகா, சித்திரபாளையம் பகுதியைச் சேர்ந்தவர். 2009ல், போயஸ் கார்டனில் டிரைவராக வேலைக்கு சேர்க்கப்பட்டார்.

ஜெயலலிதாவின் இறப்பைத் தொடர்ந்து, ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 17ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடந்தன.

இதில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட கனகராஜ், ஆத்துாரில் உள்ள அவரது சித்தி வீட்டிற்கு ஏப்ரல் 28ம் தேதி வந்தபோது, ஆத்துார் புறவழிச்சாலை பகுதியில் நடந்த விபத்தில் உயிரிழந்தார். ஆத்துார் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், விபத்தில் இறந்த டிரைவர் கனகராஜின் அண்ணன் தனபால் (43), 'இது விபத்து இல்லை. வேண்டுமென்றே வாகனத்தால் இடித்து கொல்லப்பட்டார்' என, புகார் தெரிவித்து இருந்தார். ஆனால், போலீசார் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

தற்போது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கொடநாடு வழக்கு விசாரணை மீண்டும் துவங்கி உள்ளது. இதையடுத்து, தனபாலிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டனர்.

இதையடுத்து, நீலகிரி மாவட்ட போலீசார் நேற்று தனபாலின் ஊரான சித்திரபாளையம் வந்தனர். தனபாலை விசாரணைக்காக ஊட்டிக்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...