கோவையில் தொழில் துறையினர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக அனுமதிக்கும் வகையில் புதிய செயலி விரைவில் அறிமுகம்..!

கோவை மாவட்ட தொழில் துறையினர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக அனுமதிக்கும் வகையில் ஒற்றை சாளர முறையில் புதிய செயலியை தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்.


கோவை: கோவை மாவட்ட தொழில் துறையினர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக அனுமதிக்கும் வகையில் ஒற்றை சாளர முறையில் புதிய செயலியை தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக வளர்ச்சி பணிகளை கண்காணிக்க அமைச்சர்களை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் நியமித்தார். அதன்படி கோவை மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை கண்காணிக்க மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார்.



இந்நிலையில், இன்று கோவை வந்த அமைச்சர் செந்தில் பாலாஜி வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும்போது:-

கோவையில் உள்ள 12 ஊராட்சிகளில் 1200 கிராமங்கள் உள்ளன. 332 கிராமங்களில் 3 நாட்களுக்குள் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புதிய குடிநீர் விநியோக திட்டத்தின் கீழ் மீதம் உள்ள கிராமங்களுக்கும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.



கோவை மாநகராட்சியிலும் குடிநீர் பற்றாக்குறை உள்ளதால் அது குறித்தும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாநகராட்சியில் 5 ஆயிரம் தெரு விளக்குகள் தற்போது எரியாமல் உள்ளது. வரும் ஒரு வாரத்திற்குள் ஊரக பகுதி மற்றும் மாநகராட்சி பகுதியில் தெருவிளக்குகள் சரி செய்யப்படும் என்று கூறினார்.

அதே போல் கோவை மாவட்டத்தின் தொழில்துறை மற்றும் வளர்ச்சிக்காக அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் அடங்கிய புதிய குழு அமைக்கப்பட்டு திட்டங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டு முதல்வர் கவனத்திற்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தொழில் துறையினர் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக அனுமதிக்கும் வகையில் ஒற்றைச் சாளர முறையில் அனுமதியளிக்க புதிய செயலியை தமிழக அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும், அதனை தமிழக முதல்வர் அறிமுகம் செய்து வைப்பார் என்றார்.

அதேபோல, மக்கள் சபை நிகழ்ச்சிகள் மூலம் நான் உட்பட உயர் அதிகாரிகள் வார்டு வாரிய நேரில் சென்று மக்களை சந்தித்து மனுக்கள் பெற உள்ளோம். இந்த மனுக்களை பெற்ற 10 நாட்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்தார். கனிமவள கொள்ளையை தடுக்க முழுமையான விசாரணை செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...