கோவையில் தொழிலதிபர் வீட்டில் ரூ. 1 கோடி மதிப்பிலான வைர நகைகள், 50 பவுன் தங்க நகைகள் கொள்ளை..!

இதே போல, அதே பகுதியில் ஆறு வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதுகுறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவையில் தொழிலதிபர் வீட்டில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் 50 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் தினந்தோறும் வீட்டின் கதவை உடைத்து கொள்ளை அடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான வழக்குகளில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் உள்ளனர்.

கோவை துடியலூர் அடுத்த கவுண்டர் மில் அதிர்ஷ்ட லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் சீனிவாசன் (52). இவரது வீட்டில் இவரது மனைவி மற்றும் குடும்பத்தார் வசித்து வருகின்றனர். ஐஸ்கிரீம் டீலர் ஆன இவர் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு குடும்பத்துடன் வீட்டின் முதல் மாடியில் உள்ள படுக்கை அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர்.



இந்த நிலையில், இன்று அதிகாலை எழுந்து பார்த்தபோது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைர நகைகள் மற்றும் 50 பவுன் தங்க நகை கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் துடியலூர் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதே போல, அதே பகுதியில் ஆறு வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றது. அவர்கள் இதுகுறித்து துடியலூர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று கைரேகைகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.



மேலும், சீனிவாசன் குடியிருந்த வீடு வில்லா வடிவிலான தனி சொகுசு வீடு ஆகும். அந்த பகுதியில் உள்ள வீடுகள் அனைத்தும் தனித்தனி வீடுகள் ஆக உள்ளது. இந்த வீடுகளைக் குறிவைத்துக் கொண்டு கொள்ளை அடித்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...