வால்பாறையில் 6வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் - வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் நேரில் ஆய்வு..!

இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி போட வருபவர்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது.


கோவை: வால்பாறை வட்டார பகுதியில் 6வது மெகா கொரோனா தடுப்பூசி முகாமை வால்பாறை வட்டார வளமைய தலைமை மருத்துவர் ஆய்வு செய்து வருகிறார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தமிழக அரசு அறிவித்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்படி, வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்டங்கள், வால்பாறை அரசு மருத்துவமனை, வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், முடீஸ் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், சோலையார் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற அடிப்படையில் 6வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த முகாமில் கொரோனா தடுப்பூசி போட வருபவர்களுக்கு ரத்த அழுத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனையும் மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் வால்பாறையில் உள்ள அனைத்துப் பகுதி மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த முகாமில், காலை 7 மணி முதல் இரவு 5 மணி வரை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்குக் கொரொனா தடுப்பூசி போடப்படுகிறது.



இந்நிலையில், வால்பாறையில் உள்ள சோலையார் நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பழைய வால்பாறை தேயிலைத் தோட்ட மருத்துவமனையில் கொரானா தடுப்பூசி போடும் பணிகளை வால்பாறை வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன் நேரில் ஆய்வு செய்தார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...