உதகை செல்லும் மலை ரயில் பாதையில் பாறை விழுந்ததால் ரயில் சேவை ரத்து - சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்..!

இதனை தொடர்ந்து, 180 பயணிகளுக்கும் பயணச்சீட்டுத்தொகை ரயில்வே நிர்வாகத்தால் முழுவதுமாக திருப்பி வழங்கப்பட்டது


கோவை: மேட்டுப்பாளையம் கல்லாறு - அடர்லி ரயில் நிலையங்களுக்கு இடையில் தண்டவாளத்தில் பாறை விழுந்த காரணத்தால் மலை ரயில் சேவை இன்று ரத்து செய்யப்பட்டதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகைக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை பல் சக்கரங்களால் இயக்கப்பட்டு வருவதால் சுற்றுலா பயணிகள் இம்மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

யுனெஸ்கோ அந்தஸ்து பெற்ற இம்மலை ரயிலில் பயணம் செய்ய உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகை தருவர். கடந்த பல நாட்களாகவே நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மேலும், இரவு நேரங்களில் அதிதீவிர கனமழையும் பெய்து வருகிறது. வழக்கமாக ரயில் புறப்படும் முன்பு ரயில்வே ஊழியர்கள் தண்டவாளம் வழியாக நடந்து சென்று தண்டவாளத்தில் ஏதேனும் குறைகள் உள்ளது குறித்து ஆய்வு செய்வர்.



இந்நிலையில், இன்று காலை வழக்கம் போல் 07.10 மணியளவில் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து 180 பயணிகளுடன் புறப்பட்ட மலை ரயில் கல்லாறு ரயில் நிலையத்தை தாண்டி அடர்லி ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது திடீரென மலை ரயில் பாதையில் பெரிய, பெரிய பாறாங்கற்கள் விழுந்திருப்பதைக் கண்ட ரயில் இன்ஜின் ஓட்டுநர் திடீரென ரயிலை நிறுத்தினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

மேலும், மலை ரயில் பாதையில் விழுந்த பாறாங்கற்களை அகற்ற முற்பட்டனர். ரயில் தண்டவாளத்தில் விழுந்த கற்கள் அனைத்தும் பெரிய அளவிலான பாறாங்கற்கள் என்பதால் ரயில்வே ஊழியர்களால் அகற்ற முடியவில்லை.



இதனையடுத்து, ரயிலை ரத்து செய்து மலை ரயில் மீண்டும் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டது.



இதனால் ஆர்வத்துடன் உதகையின் இயற்கை அழகைக் கண்டு ரசிக்க தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றமடைந்தனர்.

இதனையடுத்து, 180 பயணிகளுக்கும் பயணச்சீட்டுத்தொகை ரயில்வே நிர்வாகத்தால் முழுவதுமாக திருப்பி வழங்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் தனியார் வாடகை வாகனங்களில் தங்களது குடும்பத்தினருடன் உதகை நோக்கி மீண்டும் சென்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...