கிணத்துக்கடவு அருகே கண்டெய்னர் லாரி மீது பால் வேன் மோதி விபத்து - ஓட்டுநர் படுகாயம்..!

இந்த விபத்தில் பால் ஏற்றி வந்த வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கிய நிலையில், வேன் ஓட்டுநருக்கு கால் முறிவு ஏற்பட்டது.


கோவை: கோவை கிணத்துக்கடவு கல்லாங்காட்டுபுதூர் பகுதியில் கண்டெய்னர் லாரி மீது பால் வேன் மோதி விபத்தில் ஓட்டுநருக்கு கால் முறிவு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அம்பராம்பாளையம் பகுதியில் உள்ள குடோனில் இருந்து பால் ஏற்றிக் கொண்டு வேன் ஒன்று கோவைக்கு நேற்று இரவு சென்று கொண்டிருந்தது.

அப்போது, கிணத்துக்கடவு கல்லாங்காட்டுபுதூர் அருகே வரும் போது கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த கண்டனர் லாரி மீது பால் ஏற்றி வந்த வேன் பின்பக்கமாக மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் பால் ஏற்றி வந்த வேனின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது.



இந்த விபத்தில் வேனை ஓட்டி வந்த டிரைவர் சிக்கிக்கொண்டதால் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் சிக்கிக்கொண்ட டிரைவரை மீட்டனர்.

பின்னர், கால் முறிவு ஏற்பட்ட பொள்ளாச்சி வாழைகொம்புநாகூர் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவரை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து கிணத்துக்கடவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...