பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு உறவினர்கள் மட்டன் பிரியாணி கொடுத்தது, விசாரணையில் அம்பலம்.

வாகனத்தை, பின் தொடர்ந்து வந்த உறவினர்கள், வண்டி நீலம்பூர் பைபாசில் போலீசார் நிறுத்தியவுடன், மட்டன் பிரியாணி கொடுத்துள்ளனர். பின்னர், பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொண்டு அனைவரும் வேனில் வைத்து சாப்பிட்டு விட்டு சேலம் திரும்பியது தெரியவந்துள்ளது.

கோவை: பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள் சென்ற போலீஸ் வாகனம் பாதி வழியில் நிறுத்தி, உறவினர்கள் மட்டன் பிரியாணி கொடுத்துள்ளனர்.

மட்டன் பிரியாணிக்காக, பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை வழியில் உறவினர்களோடு சந்திக்க அனுமதித்ததாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏழு போலீசாரிடம் விசாரித்ததில் தெரியவந்துள்ளது.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆபாச வீடியோ பதிவு செய்து கொடுமைப்படுத்திய சம்பவம் தொடர்பான வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, வசந்தகுமார், மணிவண்ணன், சதீஷ், சபரிராஜன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில், அருளானந்தம் உட்பட 4 பேர் கோபிசெட்டிப்பாளையம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை 6 மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கோவைமகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது . இந்த வழக்கு விசாரணை ரகசியமாக நடக்க வேண்டும் என்பதால், நீதிமன்றத்தில் பூட்டிய அறைக்குள் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, கடந்த புதன்கிழமை வழக்கு விசாரணைக்கு சேலத்தில் இருந்து திருநாவுக்கரசு உள்ளிட்ட 5 பேரையும் ஆயுதப்படை சிறப்பு எஸ்.ஐ சுப்ரமணியம், காவலர்கள் பிரபு, வேல்குமார், ராஜ்குமார், நடராஜன், ராஜேஷ்குமார், கார்த்திக் உள்ளிட்ட 7 பேர் போலீசார் பாதுகாப்பாக வேனில் அழைத்து வந்தனர். 

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு சேலம் திரும்பும் போது, கோவை நீலாம்பூர் பைபாஸ் சாலையில்நடு ரோட்டில் வாகனத்தை நிறுத்தி கைதிகளை உறவினர்களுடன் பேச வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலை தளங்களில் பரவியது . இது தொடர்பாக சேலம் மாநகர போலீஸ் ஆணையர் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அவர்கள், விதிமுறைகளை மீறி கைதிகளை உறவினர்களிடம் பேச வைத்தது உறுதியானதால், சிறப்பு எஸ்ஐ சுப்ரமணியம் உட்பட 7 பேரும் புதன் கிழமை இரவு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் . இது தொடர்பாக, நடந்தது என்ன என்பது குறித்து சஸ்பெண்டான 7 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது .

விசாரணையில்,மட்டன் பிரியாணிக்கு ஆசைப்பட்டு வண்டியை நிறுத்தி கைதிகளை உறவினர்களிடம் பேச வைத்தது தெரியவந்தது. கோவை நீதிமன்றத்தில் வைத்து அவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என கைதிகளின் உறவினர்கள் போலீசாரிடம் கேட்டுள்ளனர். நீண்ட நாட்களாக மட்டன் பிரியாணி சாப்பிடவில்லை, நீங்களும் பசியாக இருப்பீர்கள், அனைவருக்கும் வீட்டில் இருந்து தயாரித்த மட்டன் பிரியாணி கொண்டு வந்துள்ளோம் என போலீசாரிடம் உறவினர்கள் கூறியுள்ளனர். 

நீதிமன்றத்தில் வைத்து எந்தவொரு பொருளும் வாங்கக் கூடாது என போலீசார் கூறியுள்ளனர். அதன் பிறகு தான் நீலாம்பூர் பைபாஸ் சாலையில்வரை வாகனத்தை, பின் தொடர்ந்து வந்துள்ளார்கள். அங்கு போலீசாரின் வாகனத்தை நிறுத்தி மட்டன் பிரியாணி கொடுத்துள்ளனர் . பின்னர் கைதிகளுடன் உறவினர்கள் பேசி உள்ளனர் . இந்த சந்திப்பு 7 நிமிட நேரம் மட்டுமே நடந்துள்ளதாக கூறப்படுகிறது . பின்னர் பிரியாணி பொட்டலங்களை வாங்கி கொண்டு அனைவரும் வேனில் வைத்து சாப்பிட்டு விட்டு சேலம் திரும்பியது தெரியவந்தது . இதுகுறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...