கோவையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறைக்கைதி பலி.!!

கோவை மத்தியச் சிறையில், உள்ள சிறை கைதி ஒருவர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல், சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத்திணறல் காரணமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை மத்தியச் சிறையில், உள்ள சிறை கைதி ஒருவர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல், சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத்திணறல் காரணமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் தேவாரம் சேர்ந்த ராமையா என்பவரின் மகன் ரமேஷ் (44). இவர் கடந்த ஜூன் மாதம் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி சப் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து கோவை மத்தியச் சிறைக்குக் கடந்த ஜூலை மாதம் 3-ஆம் தேதி மாற்றப்பட்டார். இவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல், சர்க்கரை நோய் ஆகியவை இருந்து வந்தது.

இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென ரமேஷுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ரமேஷ் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் இறந்தார். இதுகுறித்து கோவை மத்தியச் சிறை ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...