கோவையில் பிறந்து 40-நாட்கள் ஆன குழந்தைக்கு முதல்வர் காப்பிட்டுத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை அளிக்க இன்று மருத்துவ காப்பீட்டு அட்டை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனால் வழங்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டத்தில் பிறந்து 40-நாட்கள் ஆன குழந்தைக்கு முதல்வர் காப்பிட்டுத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை அளிக்க இன்று மருத்துவ காப்பீட்டு அட்டை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனால் வழங்கப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிறந்து 40-நாட்கள் ஆன குழந்தைக்கு முதல்வர் காப்பிட்டுத்திட்டத்தின் கீழ் தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை அளிக்க இன்று மருத்துவ காப்பீட்டு அட்டையை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் வழங்கினார்.
கோயம்புத்தூர் சரணாலயம் தத்து வழங்கும் மையத்திற்கு 40-நாட்கள் ஆன பெண் குழந்தை பெற்றோர்களால் ஒப்படைக்கப்பட்டது. அதனையடுத்து, ஒப்படைக்கப்பட்ட குழந்தைக்கு யாரும் இல்லை என்ற நிலையில், இருதய பிரச்சினையால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிறப்புப் பரிந்துரைச் செய்யப்பட்டு தனியார் மருத்துவமனையில் இருதய சிகிச்சை அளிக்க தனியாக மருத்துவ காப்பீடு அட்டை இன்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், இணை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் சந்திரா, குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் சுந்தர், முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அலுவலர் கிஷோர்குமார், மற்றும் மாவட்ட அலுவலர் கருண மகாராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.