கோவையில் 3-மாத குழந்தையை அடித்துக் கொன்ற 'பாசக்கார' பாட்டி தப்பி ஓட்டம்.!!

மூன்று மாத ஆண் குழுந்தையை கொன்றதுடன், 3-மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கிவிட்டு மன நலம் பாதிக்கப்பட்ட பாட்டி தப்பி சென்ற நிலையில், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலமாக பாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: மூன்று மாத ஆண் குழுந்தையை கொன்றதுடன், 3-மாத பெண் குழந்தையை கொடூரமாக தாக்கிவிட்டு மன நலம் பாதிக்கப்பட்ட பாட்டி தப்பி சென்ற நிலையில், சிசிடிவி கேமரா பதிவுகள் மூலமாக பாட்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை அருகே உள்ள கவுண்டம்பாளையம் நாகப்பா காலனியை சேர்ந்தவர் பாஸ்கரன் 31, இன்ஜினியர். இவரது மனைவி ஐஸ்வர்யா 24, இவர்களுக்குக் கடந்த 3-மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தது. ஆண் குழந்தை ஆரியன், என்றும் பெண் குழந்தைக்கு ஆரியா ஸ்ரீ எனும் பெயர் சூட்டினர்.

ஐஸ்வர்யாவின் கணவர் வேலைக்குச் சென்றுவிட்டார். ஐஸ்வர்யா மருந்து வாங்குவதற்காகத் தனது சகோதரரை அழைத்துக்கொண்டு வெளியில் சென்றார். குழந்தைகளைத் தான் பார்த்துக் கொள்வதாகத் தாயார் சாந்தி மருந்து வாங்க அனுப்பி வைத்தார்.

15-வருடங்களாகச் சாந்தி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் குழந்தைகளைச் சரமாரியாகத் தாக்கிய பாட்டி வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டார். மருத்துவமனையில் சேர்த்தபோது ஆண்குழந்தையின் இறந்துபோனான். ஆரியா ஸ்ரீ சிகிச்சை பெற்று வருகிறார்.



மனநலம் பாதிக்கப்பட்ட சாந்தி குழந்தைகளை அடித்துப் போட்டு விட்டு எங்கோ சென்றுவிட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து சாந்தி எங்குச் சென்றார் என்பது குறித்துத் தேடி வருகின்றன.

தொடர்ந்து சாந்தி பிடிபட்டாலும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மனநல காப்பக சிகிச்சைக்கு அனுப்பப்படுவார் என போலீசார் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...